Posts

தினந்தோறும் சாமி கும்பிடுறீங்களா.. இந்த 10 விஷயத்தை மறக்காம மனசுல வெச்சுக்கோங்க

... கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபடுகிறோம். வீட்டிலும் பூஜைகள் செய்து வழிபடுகிறோம். ஆனால் இவை எல்லாவற்றையும் முறையாகத் தான் செய்கிறோமா? சில விதிமுறைகள் இருக்கின்றன. உங்களுக்கு தெரியாத சில ஆன்மிக குறிப்புகளை டாப் தமிழ் நியூஸ் வாசகர்களுக்காக சொல்கிறோ  1. காயத்ரி மந்திரத்தை பயணத்தின்போது, சொல்லக் கூடாது. சுத்தமான இடத்தில் தான் காயத்ரி மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். 2. கற்பூரம் ஏற்றி கடவுளுக்கு காட்டும் பொழுது, இறைவனின் காலிற்கு நான்கு தடவை சுற்றிக் காண்பிக்க வேண்டும். தொப்புளுக்கு இரண்டு தடவை சுற்றிக் காண்பிக்கவேண்டும். முகத்துக்கு ஒரு தடவையும், முழு உருவத்துக்கும் மூன்று தடவையும் காண்பித்து வழிபட வேண்டும். 3. நமது வீட்டு வாசலில் கோலம் போடாமலும், வீட்டில் விளக்கேற்றாமலும் அருகில் இருக்கும் ஆலயங்களுக்குச் செல்லக் கூடாது. அப்படிச் செல்வதால் பலன்கள் கிடையாது. 4. விளக்கு எரிந்துக் கொண்டிருக்கும் பொழுது, அதில் இருக்கும் எண்ணெய் அல்லது நெய்யை கையால் தொடுவதும் அதன் பிறகு அதைத் தலையில் தடவிக் கொள்வதும் கூடாது. 5. சிவன் அர்ச்சனைக்கு உகந்தது வில்வ இலை. விஷ்ணுவிற்கு உகந்தது துளசி. விநாயகர் வழிபாட...

ஏன் சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது?....

சனிக்கிழமைக்கும் பெருமாளுக்கும் என்ன தொடர்பு?... இதற்கான விடை பிரம்ம வைவர்த்த புராணத்தில் உள்ளது. சூரியனுக்கு சஞ்ஜனா, சாயா என இரண்டு மனைவிகள். சூரியனுக்கும் சஞ்ஜனாவுக்கும் பிறந்தவர்கள் யமதர்ம ராஜாவும், யமுனா நதியும். சாயாவுக்குப் பிறந்தவர் சனீஸ்வரன். கண்ணபிரான் யமுனையில் உள்ள காளியனை அடக்கி யமுனா நதியைத் தூய்மையாக்கிய பின் அனைத்து தேவர்களும் யமுனையைப் போற்றத் தொடங்கினார்கள். கங்கையை விடப் புனிதமான நதியென அதைக் கொண்டாடினார்கள். அதைக் கண்ட சனீஸ்வரன் யமுனையிடம் வந்து, "சகோதரியே! உன்னை மங்களமானவள் என எல்லோரும் கொண்டாடுகிறார்கள். ஆனால் என்னை முடவன் என்றும் அமங்களமானவன் என்றும் கூறுகிறார்களே. உன்னைப் போல நானும் மங்களகரமானவனாக ஆக வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டார். அங்கே வந்த நாரதர், "சனீஸ்வரா! யமுனை கண்ணனின் திருவுள்ளத்தை மகிழ்வித்தாள். அதனால் மங்களகரமானவளாக இருக்கிறாள். நீயும் கண்ணனின் திருவுள்ளத்தை உகப்பித்தால் மங்களமாகி விடுவாய்!" என்று கூறினார். "அவனை உகப்பிக்க நான் என்ன செய்ய வேண்டும்?" என்று சனீஸ்வரன் கேட்டார். அதற்கு நாரதர், "ஹோலிக...

தர்காவில் இருந்து பூவராக சுவாமிக்கு பட்டாடை வரவேற்பு

Image

திருவெண்ணெய்நல்லூர் - சிவபெருமான் அணிந்த பாதுகை (காலணிகள்)

Image

சாமி படங்களை எந்த திசையில் வைத்து வணங்க வேண்டும்?

*🔯பொதுவாக நம்முடைய வீட்டில் பூஜையறையில்* நாம் வைக்க கூடிய சாமி படங்கள் மற்றும் சாமி விக்கிரகங்களுக்கு நாம் பூஜை செய்து வழிபாடு செய்யும் பொழுது நீங்கள் எந்த திசையில் அமர்ந்து வழிபாடு செய்ய வேண்டும் அதுபோல நீங்கள் வைக்கக்கூடிய சாமி படங்களும் சாமி விக்ரகங்களும் எந்த திசையில் இருக்க வேண்டும் என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என நான்கு திசைகள் உள்ளன. நாம் சுவாமி படங்கள் அல்லது விக்ரகங்களை கிழக்கு அல்லது வடக்கு திசை பார்த்து வைத்து வழிபாடு செய்யலாம். சுவாமி படங்கள் கிழக்கு திசை நோக்கி இருந்தால் பூஜை செய்பவர் வடக்கு திசை நோக்கி அமர்ந்து வழிபாடு செய்யலாம்.  ஒருவேளை சுவாமி படம் வடக்கு திசை நோக்கி இருந்தால் நீங்கள் கிழக்கு திசை நோக்கி அமர்ந்து வழிபாடு செய்ய வேண்டும். இதுதான் நீங்கள் சரியான வழிபாடு செய்யும் திசைக்கான சாஸ்திரம். பொதுவாக சுவாமி படங்கள் பெண் தெய்வங்களாக இருக்கும் நிலையில் அந்த பெண் தெய்வங்களுக்கு நேருக்கு நேராக அமர்ந்து வழிபாடு செய்யலாம். இது பெண் தெய்வங்களை வழிபடும் பொழுது மட்டும்தான். தெற்கு நோக்கி சாமி படங்களை வைக்க கூடாது. அதுபோல உடைந்த ச...

தலைவாசலில் தீபம் ஏற்றும் பொழுது இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்!

*🔯அந்தக் காலத்தில் எல்லாம் வீட்டின் தலைவாசல் பகுதியில் ஜன்னல்கள் இருக்கும்.அதற்கு பக்கத்தில் விளக்கு ஏற்றுவதற்கு தனியாக மாடம் இருக்கும்.* தினமும் மாலை வேளையில் இரண்டு புறமும் விளக்கு ஏற்றி வைப்பார்கள். இதனால் வீட்டில் லக்ஷ்மி கடாட்சம் நிறைந்து காணப்பட்டது. அவர்களுக்கு குடும்பத்திலும் சரி, ஆரோக்கியத்திலும் சரி, தொழிலிலும் சரி அவ்வளவாக எந்த பிரச்சினைகளையும் எதிர் கொள்ளாமல் நிம்மதியாக இருந்து வந்தனர். ஆனால் இப்போது அதை யாரும் கடைப்பிடிப்பது இல்லை. 🌹 ஒரு சிலர் கடைபிடித்தாலும் அதை தவறாக செய்து வருகின்றனர். தலைவாசலில் விளக்கேற்றும் பொழுது கவனிக்க வேண்டிய விஷயம் என்ன? எப்படி விளக்கேற்ற வேண்டும்? அதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன? எந்தத் தவறை நாம் செய்யக்கூடாது? அதனால் விளையும் விளைவுகள் என்ன? இது போன்ற பல கேள்விகளுக்கு இந்த பதிவின் மூலம் விடையை அறிந்து கொள்வோம் வாருங்கள். 🌹 தினமும் தலைவாசலில் விளக்கை ஏற்றுபவர்கள் செய்யும் மிகப்பெரிய தவறு ஒன்று உள்ளது. அப்படி தெரியாமல் விளக்கு ஏற்றுவதால் வீட்டில் நிறைய பிரச்சனைகள், கஷ்டங்கள் வரும். தலை வாசலில் விளக்கேற்றுவதால் குடும்பத்தில் நிம்மதி மட்டுமல்ல,...

🏹ராமரின் மிக சக்தி வாய்ந்த மந்திரம்🏹

*🔯ராமாய ராமபத்ராய ராமசந்திராய வேதசே ரகுநந்தாய நாதாய சீதாய பதயே நமஹ* .. சொல்லி வணங்குவோம்  ராமன் எத்தனை ராமனடி ராமன் எத்தனை ராமனடி - அவன் நல்லவர் வணங்கும் தேவனடி என்று அவர் திருவடிகளில் சரணடைவோம் இராம நாமம் நமக்கு என்ன என்ன தரும்?  நல்லன எல்லாம் தரும் !பெற்று மகிழ்வோம் ! மங்களம் கோசலேந்த்ராய மஹநீய குணாத்மனே சக்ரவர்த்தி தநூஜாய ஸார்வ பௌமாய மங்களம் *🌹ராமரின் மிக சக்தி வாய்ந்த மந்திரம்:*🌹 ராமாய ராமபத்ராய ராமசந்திராய வேதசே ரகுநந்தாய நாதாய சீதாய பதயே நமஹ   *🌹பொருள்:🌹* இந்த மந்திரம் ஸ்ரீ ராமனின் பல்வேறு பெயர்களை பிரதிபலிக்கின்றது. ராமனை புகழும் இந்த மந்திரம் மிக மங்களகரமாந்து. தாய் சீதா தேவியின் கணவனான் ராமனின் பெயர் சொன்னாலே இன்பத்தை வாரி வழங்குவார். *🌷இராம நாமம் நமக்கு என்ன என்ன தரும்?*🌷 நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே சென்மமும் மரணமும் இன்றித் தீருமே இம்மையே இராம என்ற இரண்டெழுத்தினால். நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம் வீ டியல் வழியதாக்கும் வேரியம் கமலை நோக்கும் நீடிய அரக்கர் சேனை நீறு பட்டழிய வாகை சூடிய சிலையிராமன் தோள்...

தஞ்சை பெரிய கோவில்...!?

Image
  பெரியகோவிலை கட்ட ராஜராஜசோழன் இடம் தேர்வு செய்த விதம்! பெரியகோவிலை கட்ட ராஜராஜசோழன் இடம் தேர்வு செய்த விதமே சற்று வியப்பானது. மலை குன்றுகள் இல்லாத மணல் பகுதிகள் நிறைந்த சம தளத்தில், கற்கலை கொண்டு கோவில் அமைத்துள்ளார். இக்கோவிலை ராஜராஜசோழன் கட்ட தனிப்பட்ட வரலாறு உண்டு. அதாவது, காஞ்சிபுரத்தில் ஒரு முறை ராஜராஜசோழன் சென்ற போது, அங்கு ராஜசிம்மனால் கட்டப்பட்ட கைலாசநாதர் கோவில் ராஜராஜனை மிகவும் கவர்ந்தது. அதே போல் ஒரு கோவிலை கட்ட விரும்பினார், அதுவும் கோவில் யாரும் காட்டாத அளவுக்கு மிகவும் பிரமாண்டமாக கட்டவேண்டும் என்று நினைத்தார். அப்படி கட்டப்பட்ட கோவில்தான் பெரியகோவில். வீரசோழன் குஞ்சரமல்லன் என்ற பெருந்தச்சன் முன்னிலையில், மதுராந்தகனாகன நித்த வினோத பெருந்தச்சன் உதவியாலும் 6 ஆண்டுகளில் கோவில் கட்டப்பட்டது. கோவிலை சுற்றி மதிலரண், நீரரண் என இரு அரண்களையும் அகழியையும், அமைத்தார். இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீ உயரமான ஒரு கற்கோயிலை ராஜராஜன்...

கருடபுராணம் சொல்லும் நன்மைகள்

*1 அன்னதானம் செய்தல் விரும்பிய உலகத்தில் ஒரு வருடம் வீதம் சுகித்திருப்பார்.* *2 கோ தானம் செய்தல் கோலோகத்தில் வாழ்வர்* *3 பசு கன்றீனும் சமயம் தானம் கொடுத்தவருக்கு கட்டாயம் வைகுண்ட வாசம் உண்டு* *4 குடை தானம் செய்தவர் 1000 ஆண்டுகள் வருணலோகத்தில் சுகம் அனுபவிப்பார்* *5 தாமிரம்; நெய், கட்டில்; மெத்தை, ஜமுக்காளம், பாய்; தலையனை இதில் எதை தானம் செய்தாலும் சந்திலலோகத்து சுகங்களை அனுபவிப்பார்* *6 வஸ்திர தானம் கொடுத்தவருக்கு 10000 ஆண்டுகள் வாயுலோகத்தில் வாழ்வார்* *7 இரத்தம், கண், உடல் தானம் கொடுத்தவருக்கு அக்கினிலோகத்தில் ஆனந்தமாயிருப்பார்* *8 ஆலயத்துக்கு யானை தானம் கொடுத்தவருக்கு இந்திரனுக்கு சமமான ஆசனத்தில் அமர்ந்திருப்பார்* *9 குதிரையும், பல்லக்கும் தானம் கொடுத்தவருக்கு 14 இந்திரன் காலம் வரை வருணலோகத்தில் வாழ்வார்* *10 நந்தவனங்களை ஆலயத்துக்கு அளிப்பவர் ஒரு மன் வந்தரகாலம் வாயுலோகத்தில் வாழ்வார்* *11 தானியங்களையும், நவரத்தினங்களையும் தானம் கொடுத்தவருக்கு மறு ஜென்மத்தில் அறிவாளியாகவும் தீர்க்காயுள் கொண்டவராயும் வாழ்வர்* *12 பயன் கருதாது தானம் செய்பவரின் மரணம் உன்னதமாயிப்பதோடு மீண்டும் பிறவி வாய்ப...

காசிக்கு_நிகரான பஞ்ச_குரோச_தலங்கள்

#திருநெல்வேலி மற்றும் தென்காசி அருகிலேயே ‘பஞ்ச குரோச தலங்கள்’ எனப்படும் ஐந்து தலங்களும் அமைந்திருக்கின்றன. இந்த ஆலயங்களை சிறிய குறிப்புகளாக இங்கே பார்ப்போம். இந்த பூமியில் பிறந்தவர்கள் ஒவ்வொருவரும், தன் வாழ்க்கையில் ஒரு முறையாவது காசிக்கு சென்று காசிவிஸ்வநாதரையும், விசாலாட்சி அம்மனையும் வழிபட்டு வர வேண்டும் என்பது ஐதீகம். ஆனால் பெரும்பாலானவர்களால் அது இயலாத காரியமாகவும் உள்ளது. ஏழை எளியவர்கள் அவ்வளவு தூரம் சென்று இறைவனை தரிசித்து வருவது என்பது சாத்தியமில்லைதான். அதற்காக உருவானவையே ‘பஞ்ச குரோச தலங்கள்’ என்ற ஐந்து சிவாலயங்கள். குரோசம் என்பதற்கு இரண்டரை நாழிகையில் கடந்து செல்லக்கூடிய தூரம் என்று பொருள். #தேவர்களுக்காகத் தோன்றிய அமுதக்குடத்தை, மனிதர்கள் பயன்பெறுவதற்காக அம்பெய்தி உடைத்தார், ஈசன். அந்த அமுதம் பல்வேறு இடங்களில் ஐந்து குரோசம் வரை பரவி, ஐந்து தலங்களாக மாறியது. இந்த ஐந்து ஆலயங்களே ‘பஞ்ச குரோச தலங்கள்’ எனப்படுகின்றன. திருநெல்வேலி மற்றும் தென்காசி அருகிலேயே இந்த ஐந்து தலங்களும் அமைந்திருக்கின்றன. இந்த ஆலயங்களை சிறிய குறிப்புகளாக இங்கே பார்ப்போம்.   🕉️🔱 #சிவசைலம் தென்காசி மாவ...

12 ராசிகளுக்கான பீஜாட்சர மந்திரங்கள்

*🔯12 ராசிகளுக்கான பீஜாட்சர மந்திரங்கள்! *🔯ஒவ்வொரு ராசிக்கான பீஜாட்சர மந்திரங்களை தினமும் உச்சரித்து நம் உடலில் உள்ள ஏழு சக்கரங்களுக்கு சக்தியை அதிகரித்துக் கொள்ளுங்கள்...* நமது உடலில் உள்ள ஏழு சக்கரங்களை தியானத்தின் மூலம் இயக்க சக்தியான ஆத்ம சக்தியை அடைய முடியும்.  நம் முன்னோர்கள் இறைவனுடைய மந்திரத்தை இந்த சக்கரங்களை எழுப்பக்கூடியதாக அமைத்திருக்கின்றனர்.   Beeja Atchara Mantra இப்படி நம் இயக்க சக்தியை அளிக்கக்கூடியது தான் பீஜாட்சர மந்திரங்கள். 🔯பீஜம் என்றால் விதை. அக்‌ஷரம் என்றால் எழுத்துக்கள். விதை போன்ற எழுத்துக்கள் அடங்கிய மந்திரம் என்ற பொருளை உணர்த்துவதே பீஜாக்‌ஷர மந்திரம் எனப்படுகிறது.  🔯பீஜாட்சர மந்திரத்தை உபயோகித்தால் அந்த இடத்தில் மிக அதிகளவில் நேர்மறை அதிர்வாற்றலை உண்டாக்க வல்லது.  அதனால் அதை பிரயோகிப்பவர்களுக்கும், அவரை சுற்றீ உள்ளார்களுக்கும் ஆன்ம் மற்றும் ஜீவ சக்தி பெருக்க வல்லது.  அப்படிப்பட்ட சக்தி வாய்ந்த பீஜாட்சர மந்திரம் ஒவ்வொரு ராசிக்கு ஏற்ற வகையில் இருப்பதை நாம் தினமும் சொல்லி வந்தால் கூடுதல் சக்தியை நாம் உணர முடியும், பெற முடியும்.  ...

சனி மகாபிரதோஷத்தின் 17 பலன்கள்!

*🔯சனி மகாபிரதோஷம் சகல வினைகளையும் போக்கும்...* 1. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி தினங்களில் மாலை 4.30 முதல் ஆறு மணிவரை உள்ள காலம்  பிரதோஷ காலம் எனப்படுகிறது. அன்றுதான் ஈசன் ஆலகால விஷத்தை உண்டு அகிலத்தை காத்ததாக புராணங்கள் கூறுகின்றன. இந்த திரயோதசி திதி சனிக்கிழமைகளில் வந்தால்  சனி மகாபிரதோஷம் என்று சொல்லப்படுகிறது.  2. பிரதோஷ காலம் என்பது மாலை 4 மணியில் இருந்து 6.30 வரை என சொல்கிறார்கள். இந்த நேரத்தில் சிவாலயம் சென்று வலம் வந்து ஈசனைத் தரிசிக்க வேண்டும். வசதி உள்ளவர்கள் இறைவனுக்கும் நந்திக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்தால் நல்லது. 3. பிரதோஷ தரிசனம் காணும்வரை உணவு தவிர்த்து முழு விரதம் இருக்க வேண்டும். சனி மகாபிரதோஷ நாளில் இருக்கும் விரதம் ஆயிரம் சாதாரண தினப் பிரதோஷப்பலனைத் தரும் என்பது ஆன்மிக நம்பிக்கை. 4. பிரதோஷ வேளையில் நந்தியம்பெருமானுக்கு அருகம்புல் அல்லது வில்வ மாலை சார்த்தி நெய் விளக்கு ஏற்றி பச்சரிசி வெல்லம் வைத்து பூஜை செய்யலாம்.  5. பிரதோஷ நேரத்தில் மட்டும் சிவபெருமானை வலம் வரும் விதத்தை சோமசூக்தப் பிரதட்சணம் என்பர். சோமசூக்தம் என்றால் அபிஷ...

🔯25 வகையான ஏகாதசி என்னென்ன தெரியுமா?

*🔯திருமாலுக்கு மிகவும் உகந்த விரதம் ஏகாதசி விரதம் ஆகும்.*  *🔯ஏகாதசி திதி 15 நாட்களுக்கு ஒரு முறை வரும் . இந்த திதியை புண்யகாலம் என்பர் .*  🔯இதில் மார்கழி மாத வளர்பிறையில் வரும் வைகுண்ட ஏகாதசி மிகவும் பிரபலமாக இருக்கிறது.  ஓராண்டில் 25 ஏகாதசிகள் வருகின்றன. இந்த நாளில் விரதமிருந்தால் வாழும்போது செல்வச்செழிப்பும் வாழ்விற்கு பின் மோட்சமும் கிடைக்கும். ஏகாதசியை விட சிறந்த விரதம் கிடையாது என்று பதினெட்டு புராணங்களும் கூறுகின்றன.  அதனால், ஏகாதசி அன்று அதிகாலையில் எழுந்து நீராடி, விரதத்திற்கு தயாராக வேண்டும்.  அன்றைய தினம் துளசி இலைகளை பறிக்கக் கூடாது,  அதனால், அதை முதல் நாளே பறித்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.  அன்றைய தினம் முழுவதும் துளசி தீர்த்தம் மட்டும் அருந்தி விரதம் இருப்பது நல்லது.  முடியாதவர்கள், பழங்களை நிவேதனம் செய்து சாப்பிடலாம்  சிறிது பலகாரங்களையும் ஏற்றுக் கொள்ளலாம். எக்காரணம் கொண்டும் பகலில் தூங்கக் கூடாது. இரவில் கண்டிப்பாக பஜனை செய்ய வேண்டும்.  இது முடியாவிட்டால், விஷ்ணு பற்றிய நூல்களை படிக்கலாம்.  இந்த விரதம் ...

27 நட்சத்திரத்தில் பிறந்து உள்ளவர்கள் யார் யார் என்பதை பற்றிய பதிவு

அசுவினி: அசுவினி நட்சத்திரத்தில் அஸ்வத்தாமன் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீசரஸ்வதி தேவி. பரணி: பரணி நட்சத்திரத்தில் துரியோதனன் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீதுர்கா தேவி. கிருத்திகை: கிருத்திகை நட்சத்திரத்தில் கார்த்திகேயன் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் முருகப் பெருமான். ரோகிணி: ரோகிணி நட்சத்திரத்தில் கிருஷ்ணன் மற்றும் பீமசேனன் பிறந்துள்ளனர். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீகிருஷ்ணன். மிருகசீரிடம்: மிருகசீரிடம் நட்சத்திரத்தில் புருஷமிருகம் பிறந்துள்ளது. இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் சிவ பெருமான். திருவாதிரை: திருவாதிரை நட்சத்திரத்தில் கருடன், ருத்ரன், ஆதிசங்கரர்ரா மற்றும் மானுஜர் பிறந்துள்ளனர். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் சிவ பெருமான். புனர்பூசம்: புனர்பூசம் நட்சத்திரத்தில் ராமன் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீராமர். பூசம்: பூசம் நட்சத்திரத்தில் பரதன் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீதட்சிணாமூர்த்தி. ஆயில்யம்: ஆயில்யம் நட்சத்திரத்தில் தர்மராஜா,லக்ஷ்ம...

நவதுர்க்கை

நவதுர்க்கை என்றால் துர்க்கையின் ஒன்பது வடிவங்கள் என கூறப்படுகின்றது.*  ‘நவ’ என்றால் ஒன்பது என்பது பொருள். வேதங்கள் துர்க்கைக்கு ஒன்பது வடிவங்கள் இருப்பதாகக் கூறுகின்றது. நவ துர்க்கைகள் - துர்க்கை அவதாரங்கள் : 1.சைலபுத்ரி 2.பிரம்மசாரிணி 3.சந்திர காண்டா 4.கூஷ்மாண்டா 5.ஸ்கந்த மாதா 6.காத்யாயனி 7.காளராத்திரி 8.மகாகௌரி 9.சித்திதாத்ரி 1.சைலபுத்ரி துர்க்கை அம்மனின் முதல் வடிவம் சைலபுத்ரி. நவராத்திரி முதல் நாளில் சைலபுத்ரி துர்க்கையை வழிபடுவது வழக்கம். சைலபுத்ரி என்பது ‘மலைமகள்’ என்று பொருள். மலை அரசனான இமவானின் என்பவரின் மகள் இவர். இவருக்கு பார்வதி, சதி, பவானி தேவி என பல்வேறு பெயர்கள் உள்ளன. இவர் தனது முன் அவதாரத்தின் தட்சனின் மகளாக பிறந்ததால் ‘தாட்சாயினி’ என்றும் கூறுவர். இவர் தான் சிவனை திருமணம் பார்வதி தேவி ஆவார். ஒன்பது சக்கரங்களில் முதல் சக்கரமாக, மூலாதாரமாக விளங்குகின்றார். இவரின் வாகனம் நந்தியாகவும், ஆயுதம் சூலத்தையும் ஏந்தி நிற்கிறாள். நவராத்திரி விழாவில் ஒவ்வொரு தினத்தில் செய்ய வேண்டிய பூஜை மற்றும் பிரசாதங்களின் விபரம் 2.பிரம்மசாரிணி நவராத்திரி திருவிழாவில் இரண்டாம் நாளில் வணங்கப்...

திருச்சி முக்கொம்பு புகழ்பெற்ற காத்தவராயன் சாமி

Image

நாயுருவி மூலிகை - சர்வ வசியம்

Image
*🔯நாயுருவி மூலிகை - சர்வ வசியம்* நாயுருவி மூலிகை - சர்வ வசியம் சித்தர்கள் கண்டறிந்த அபூர்வ மூலிகைகளில் ஒன்றுதான் நாயுருவி ஆகும். இம்மூலிகை மருத்துவம் மற்றும் மாந்திரீகம் இரண்டிலும் செயல்படும் ஆற்றல் கொண்டது ஆகும். இதில் நாயுருவி, செந்நாயுருவி என இரண்டு வகை உண்டு. நாயுருவி முக வசியம் எங்கும் சுலபமாக கிடைக்கும் நாயுருவி மூலிகை வேரினை வளர்பிறையில் பறித்து தினமும் பல் துலக்கி வர முக வசியம், ஜன வசியம், உண்டாகும்.  இம் முறையை 40 நாட்கள் மட்டும் தொடர்ந்து செய்து பின்பு நிறுத்தி விடவும். நாயுருவி வேரினால் பல் துலக்கி வரும் போது உடலில் உஷ்ணம் அதிகரிக்கும் எனவே தினமும் பசும் பால் உண்டு வரவும்.   யோகம் தவம் செய்ய பசி தம்பனம் செய்யும் நாயுருவி நாயுருவி விதை ஒரு கைபிடி அளவு பறித்து பசும் பால் விட்டு அரைத்து 200 மிலி பசும் பாலில் கலந்து குடித்து விட பசி எடுக்காது. இம்முறையில் தான் சித்தர்கள், முனிவர்கள் பசியை தம்பனம் செய்து சமாதி நிலை யோகம் செய்வர். பின்பு தேவைப்படும் போது பசியை தூண்டும் மூலிகை சூரணங்களை உண்டால் பசி எடுக்கும். *🔯செந்நாயுருவி சர்வ வசியம்* செந்நாயுருவியை வள...

பரமபதத்தின் இரகசியம் தான் என்ன…!

Image
*🔯மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி அன்று சாதாரண மக்களும் அறிந்துணர்வதற்காகப் பரமபதத்தைக் காட்டுவார்கள்.  இந்த வாழ்க்கையில் மனிதனானபின் மிருகத்திலிருந்து நாம் எப்படி மனித நிலைக்கு வந்தோம்…? மனிதனானபின் எப்படிப் பரமபதம் அடைவது…? என்று சிந்தித்துச் செயல்படும் நிலைக்குத்தான் பரமபதத்தின் படத்தைப் போட்டு அங்கே காட்டி இருப்பார்கள். பரமபதத்தில் நாம் தாயத்தை உருட்டுகின்றோம். உருட்டிக் கொண்டு போனவுடனே  1.முதலில் சிறு பாம்பு கடிக்கும். அது கடித்த பின் மீண்டும் கீழே கொண்டு போய் விட்டுவிடும். 2.இதிலிருந்து தப்பித்து மேலே சென்றவுடன் அதை விடப் பெரிய பாம்பு கடித்தவுடன் மேலே இருந்து கீழே வந்து விடுகின்றோம்.  3.இப்படி அதையெல்லாம் தப்பித்து மேலே போகும் போது அதை விடப் பெரிய பாம்பு கடிக்கிறது. மீண்டும் “திரும்பத் திரும்ப வந்து…!” பல சுழற்சிகள் ஆகி நாம் மேலே போகின்றோம். 4.இன்னும் இரண்டே கட்டம்…! எல்லாவற்றையும் விடப் பெரிய பாம்பு அங்கே இருக்கின்றது. 5.பயத்தால் உருட்டிய உடனே தாயம் விழுந்துவிடும். மீண்டும் அந்த விஷமான நிலைகள் பட்டவுடனே “ஜர்ர்ர்...” என்று கீழே இங்கே பன்றிக்குள் கொண்டு வந்...
 

அஷ்டமி, நவ‌மி அ‌ன்று நல்ல செயல்கள் செய்ய தயங்குவது ஏன்?

கிருஷ்ணன் பிறந்த அஷ்டமியையும், ராமன் பிறந்த நவமியையும் எல்லோரும் கொண்டாடுகிறார்கள். ஆனால், இன்னொரு பக்கத்தில் அதே நாளில் எதையும் தொடங்குவதற்கு பயப்படுகிறார்கள். இது ஏன்?  சாதாரணமாக அஷ்டமி, நவமியில் தொட்டது துலங்காது என்றொரு பழமொழி உண்டு.  ஆனால், நவராத்திரியில் வரக்கூடிய அஷ்டமி, நவமியையும், கிருஷ்ணனுக்குரிய அஷ்டமியையும், ராமனுக்குரிய நவமி ஆகிய நான்கு நாட்களும் அஷ்டமி, நவமிக்கு உகந்த நாட்கள்.  8, 17, 26 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள் அஷ்டமியில் எது வேண்டுமானாலும் செய்யலாம்.  இவர்களுக்கு அஷ்டமியால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் எதுவும் இருக்காது.  ஏனென்றால் அஷ்டமி என்பது 8வது திதி. அதனால், 8ஆம் எண்ணில் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு அது ஒத்துவரும்.  அதேபோல, 8 என்பது சனி பகவான் ஆதிக்கம் உடைய எண். மகர ராசி, கும்ப ராசிக்காரர்களும் அஷ்டமி அன்று எது வேண்டுமானாலும் செய்யலாம்.  மேலும், சனி பகவானின் ஆதிக்கம் பிறந்தவர்கள். அதாவது, ஜாதகத்தில் சனி உச்சம் அல்லது ஆட்சி பெற்றவர்களும் அஷ்டமி திதியில் எது வேண்டுமானாலும் செய்யலாம். அது அவர்களை பாதிக்காது.  நவமி என்...