தலைவாசலில் தீபம் ஏற்றும் பொழுது இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்!



*🔯அந்தக் காலத்தில் எல்லாம் வீட்டின் தலைவாசல் பகுதியில் ஜன்னல்கள் இருக்கும்.அதற்கு பக்கத்தில் விளக்கு ஏற்றுவதற்கு தனியாக மாடம் இருக்கும்.* தினமும் மாலை வேளையில் இரண்டு புறமும் விளக்கு ஏற்றி வைப்பார்கள். இதனால் வீட்டில் லக்ஷ்மி கடாட்சம் நிறைந்து காணப்பட்டது. அவர்களுக்கு குடும்பத்திலும் சரி, ஆரோக்கியத்திலும் சரி, தொழிலிலும் சரி அவ்வளவாக எந்த பிரச்சினைகளையும் எதிர் கொள்ளாமல் நிம்மதியாக இருந்து வந்தனர். ஆனால் இப்போது அதை யாரும் கடைப்பிடிப்பது இல்லை.

🌹 ஒரு சிலர் கடைபிடித்தாலும் அதை தவறாக செய்து வருகின்றனர். தலைவாசலில் விளக்கேற்றும் பொழுது கவனிக்க வேண்டிய விஷயம் என்ன? எப்படி விளக்கேற்ற வேண்டும்? அதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன? எந்தத் தவறை நாம் செய்யக்கூடாது? அதனால் விளையும் விளைவுகள் என்ன? இது போன்ற பல கேள்விகளுக்கு இந்த பதிவின் மூலம் விடையை அறிந்து கொள்வோம் வாருங்கள்.

🌹 தினமும் தலைவாசலில் விளக்கை ஏற்றுபவர்கள் செய்யும் மிகப்பெரிய தவறு ஒன்று உள்ளது. அப்படி தெரியாமல் விளக்கு ஏற்றுவதால் வீட்டில் நிறைய பிரச்சனைகள், கஷ்டங்கள் வரும். தலை வாசலில் விளக்கேற்றுவதால் குடும்பத்தில் நிம்மதி மட்டுமல்ல, பித்ரு தோஷமும் நீங்கும் என்பது ஐதீகம். பித்ரு தோஷம் போக எவ்வளவு கோவில், குளம் என்று சுற்றினாலும் கிடைக்காத பலன், (Whatsapp Telegram 9043014555) தலைவாசலில் விளக்கு ஏற்றுவதன் மூலம் கிடைக்கும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இது பலருக்கும் தெரியாத ஒரு விஷயம்.

🌹 அதனால் பல வீடுகளில் இன்று தலை வாசலில் விளக்கேற்றி வழிபட்டு வருகின்றனர். அப்படி விளக்கேற்றும் பொழுது தலைவாசல் பகுதியில் கீழ்பக்கமாக விளக்கை வைத்து ஏற்றக் கூடாது என்று சாஸ்திரம் கூறுகிறது. அதாவது வாசலைத் தாண்டி நாம் கால் வைக்கும் தரைப்பகுதியில் விளக்கு ஏற்றக்கூடாது. வெறும் தரையில் தலைவாசல் பகுதியில் விளக்கு வைப்பது வீட்டில் கஷ்டங்களை தான் ஏற்படுத்தும் என்கிறது சாஸ்திரம்.

🌹 அதனால் தான் அந்தக் காலத்தில் அதற்கு என்று தனியாக மாடம் வைத்தார்கள். இப்போது இருக்கும் காலகட்டத்தில் அவை வைக்கப்படுவதில்லை என்பதால் தலைவாசலில் முக்காலி அல்லது ஸ்டாண்ட் போல் அமைத்து அதன் மேல் விளக்கு வைத்து ஏற்றலாம். இது தான் சரியான முறை என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

🌹 அகல் விளக்கு🌹

தலை வாசலில் விளக்கு ஏற்றுவதே, குடும்பத்தில் மன நிம்மதியும், லக்ஷ்மி கடாட்சம் பெருகி, செல்வம் அதிகரிக்கவும் தான். அதை முறையாக செய்ய வேண்டும். தலைவாசல் அருகே கீழே கால் வைக்கும் இடத்தில் தீபம் ஏற்றுவதால் குடும்ப கஷ்டங்கள் வரும். அதனால் அப்படி செய்யாமல் முக்காலி வைத்து அதன் மீது தீபம் ஏற்றி லக்ஷ்மி தேவியை வீட்டிற்கு அழையுங்கள். நிறைய நன்மைகள் நடக்கும்.

🌹 குபேர விளக்கு🌹

🌹 ஒரு சிலர் குபேர தீபத்தை தலைவாசலில் வைத்து ஏற்றி வைக்கிறார்கள். இதுவும் வீட்டிற்கு வரும் மகாலட்சுமியை வாசலில் காக்க வைப்பது போல் அர்த்தமாகிறது. குபேர தீபத்தை வீட்டிற்கு உள்ளே பூஜை அறையில் வைத்து ஏற்ற வேண்டும். தலை வாசலில் வைத்து ஏற்றுவது மிகப் பெரிய தவறான செயலாகும். குபேர தீபம் செல்வம் பெருக, நாம் ஏற்றும் ஒரு தீபம். அதை தலைவாசலில் வைக்கக்கூடாது என்று சாஸ்திரம் சொல்கிறது. தலைவாசலில் ஏற்றினால் தனவரவு தடைபடும் என்பதை நினைவில் வையுங்கள்.

Comments

Popular posts from this blog

27 நட்சத்திரத்தில் பிறந்து உள்ளவர்கள் யார் யார் என்பதை பற்றிய பதிவு

ஏன் சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது?....

18 சித்தர்கள் மூல மந்திரம்