12 ராசிகளுக்கான பீஜாட்சர மந்திரங்கள்
*🔯12 ராசிகளுக்கான பீஜாட்சர மந்திரங்கள்!
*🔯ஒவ்வொரு ராசிக்கான பீஜாட்சர மந்திரங்களை தினமும் உச்சரித்து நம் உடலில் உள்ள ஏழு சக்கரங்களுக்கு சக்தியை அதிகரித்துக் கொள்ளுங்கள்...*
நமது உடலில் உள்ள ஏழு சக்கரங்களை தியானத்தின் மூலம் இயக்க சக்தியான ஆத்ம சக்தியை அடைய முடியும்.
நம் முன்னோர்கள் இறைவனுடைய மந்திரத்தை இந்த சக்கரங்களை எழுப்பக்கூடியதாக அமைத்திருக்கின்றனர்.
Beeja Atchara Mantra
இப்படி நம் இயக்க சக்தியை அளிக்கக்கூடியது தான் பீஜாட்சர மந்திரங்கள்.
🔯பீஜம் என்றால் விதை. அக்ஷரம் என்றால் எழுத்துக்கள். விதை போன்ற எழுத்துக்கள் அடங்கிய மந்திரம் என்ற பொருளை உணர்த்துவதே பீஜாக்ஷர மந்திரம் எனப்படுகிறது.
🔯பீஜாட்சர மந்திரத்தை உபயோகித்தால் அந்த இடத்தில் மிக அதிகளவில் நேர்மறை அதிர்வாற்றலை உண்டாக்க வல்லது.
அதனால் அதை பிரயோகிப்பவர்களுக்கும், அவரை சுற்றீ உள்ளார்களுக்கும் ஆன்ம் மற்றும் ஜீவ சக்தி பெருக்க வல்லது.
அப்படிப்பட்ட சக்தி வாய்ந்த பீஜாட்சர மந்திரம் ஒவ்வொரு ராசிக்கு ஏற்ற வகையில் இருப்பதை நாம் தினமும் சொல்லி வந்தால் கூடுதல் சக்தியை நாம் உணர முடியும், பெற முடியும்.
🔯ஒவ்வொரு ராசிக்கான பீஜாட்சர மந்திரத்தை இங்கு பார்ப்போம்.
*🔯12 ராசிக்குமான பீஜாட்சர மந்திரங்கள் :*
மேஷம் – ஓம் ஐம் க்லீம் சௌம்
ரிஷபம் – ஓம் ஐம் க்லீம் ஸ்ரீம்
மிதுனம் – ஓம் க்லீம் ஐம் சௌம்
கடகம் – ஓம் ஐம் க்லீம் ஸ்ரீம்
சிம்மம் – ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் சௌம்
கன்னி – ஓம் ஸ்ரீம் ஐம் சௌம்
துலாம் – ஒம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம்
விருச்சிகம் – ஓம் ஐம் க்லீம் சௌம்
தனுசு – ஓம் ஹ்ரீம் க்லீம் சௌம்
மகரம் – ஓம் ஐம் க்லீம் ஹ்ரீம் ஸ்ரீம் சௌம்
கும்பம் – ஓம் ஹ்ரீம் ஐம் க்லீம் ஸ்ரீம்
மீனம் – ஓம் ஹ்ரீம் ஐம் க்லீம் ஸ்ரீம்
மேலே குறிப்பிடப்பட்ட ஒவ்வொரு ராசிகளுக்கான பீஜாட்சர மந்திரத்தை தினமும் எத்தனை முறை சொல்ல முடியுமோ அத்தனை முறை மனதில் சொல்லி வர அதைப் பொறுத்து நம்முடைய ஆதம், ஜூவ சக்தி பெருகும்.
Comments
Post a Comment