Posts

Showing posts with the label kovil

தஞ்சை பெரிய கோவில்...!?

Image
  பெரியகோவிலை கட்ட ராஜராஜசோழன் இடம் தேர்வு செய்த விதம்! பெரியகோவிலை கட்ட ராஜராஜசோழன் இடம் தேர்வு செய்த விதமே சற்று வியப்பானது. மலை குன்றுகள் இல்லாத மணல் பகுதிகள் நிறைந்த சம தளத்தில், கற்கலை கொண்டு கோவில் அமைத்துள்ளார். இக்கோவிலை ராஜராஜசோழன் கட்ட தனிப்பட்ட வரலாறு உண்டு. அதாவது, காஞ்சிபுரத்தில் ஒரு முறை ராஜராஜசோழன் சென்ற போது, அங்கு ராஜசிம்மனால் கட்டப்பட்ட கைலாசநாதர் கோவில் ராஜராஜனை மிகவும் கவர்ந்தது. அதே போல் ஒரு கோவிலை கட்ட விரும்பினார், அதுவும் கோவில் யாரும் காட்டாத அளவுக்கு மிகவும் பிரமாண்டமாக கட்டவேண்டும் என்று நினைத்தார். அப்படி கட்டப்பட்ட கோவில்தான் பெரியகோவில். வீரசோழன் குஞ்சரமல்லன் என்ற பெருந்தச்சன் முன்னிலையில், மதுராந்தகனாகன நித்த வினோத பெருந்தச்சன் உதவியாலும் 6 ஆண்டுகளில் கோவில் கட்டப்பட்டது. கோவிலை சுற்றி மதிலரண், நீரரண் என இரு அரண்களையும் அகழியையும், அமைத்தார். இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீ உயரமான ஒரு கற்கோயிலை ராஜராஜன்...
 

ஒன்பது நவக்கிரகஆலயங்கள்

Image
ஒன்பது நவக்கிரகஆலயங்களையும் . ஒரே நாளில்  தரிசனம் செய்ய காலநேரஅட்டவணையுடன் வழிதடங்கள்  !!! ஒன்பது நவ கிரகங்கள் ஆலயங்கள் அனைத்தும் கும்பகோணம் மயிலாடுதுறை காரைக்கால் பகுதியை  சுற்றி அமைந்திருக்கின்றன. கீழ்கண்ட கால அட்டவணை படி உரிய வழி தடங்களில்  பயணம் செய்து ஒன்பது நவக்கிரக ஆலயங்களையும் ஒரே நாளில்  தரிசனம் செய்து அருள் பெற வேண்டுகிறோம். 1, திங்களூர் (சந்திரன்): ********** தரிசனம் நேரம் :1மணி நேரம் காலை 6மணி ஒன்பது  நவகிரக ஆலயங்களில் முதலில் ஆரம்பிக்கும்  வேண்டியது திங்களூர்தான். நீங்கள் பேருந்தில் செல்ல விரும்பினால் கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து  பாபநாசம், ஐயம்பேட்டை வழியாக 33 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திங்களூரை சுமார் 1 மணி நேர நேரத்தில் அடைந்து விட முடியும். இதற்கு சரியாக காலை 5.00 மணிக்கெல்லாம் கும்பகோணத்திலிருந்து நீங்கள் கிளம்ப வேண்டும். பின்னர் திங்களூர் கைலாசநாதர் கோயிலில் சுவாமி தரிசனத்தை ஒரு மணி நேரத்திற்குள் முடித்துக்கொண்டு 7 மணிக்கு ஆலங்குடி  கிளம்பலாம். 2, ஆலங்குடி (குரு) : ******* தரிசனம் நேரம்:1மணி நேரம் காலை ...

கோவில் சுவற்றில் சிகப்பு-வெள்ளை வர்ணம் பூசுவது ஏன்?! வியப்பூட்டும் 8 உண்மைகள்.

ஒவ்வொரு மனிதன் உடம்பிலும் இரத்தத்தில் வெள்ளை அணுக்கள், சிவப்பு இரத்த அணுக்கள் இருக்கும். சிவப்பு அணுக்கள் ஆக்சிஜனை நம் உடலின் எல்லா பாகங்களுக்கும் கொண்டு செல்கிறது.  வெள்ளை அணுக்கள் நோய் எதிர்ப்புச் சக்தியை நமக்கு அளிக்கிறது.இவ்விரண்டு அணுக்களும் நாம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு மிகவும் இன்றியமையாதது. இதை குறிக்க தான் வெள்ளை மற்றும் சிகப்பு நிறங்களில் கோவில்களில் சுவர்களில் பூசப்பட்டிருகின்றது . ஆண்களின் விந்து வெள்ளை நிறமுடையது, பெண்களின் கருப்பை சிகப்பு நிறத்தில் இருக்கும். இவை இரண்டும் சேர்ந்து தான் இங்கே உயிர் உண்டாகிறது. இதனையும் கோவில் சுவர் குறிப்பால் உணர்த்துகிறது. மனதில்,உடலில் உயிர் உண்டாவதை போல இறைவனின் ஆன்மா மூல ஸ்தானத்தில் இருக்கும். அதனால் தான் அதை கருவறை என்று கூறுகிறார்கள். சுவர்களில் உள்ள வர்ணங்கள் இவைகளை சான்றாக வைத்து நமக்கு வாழ்வியலையும் கூடவே சேர்த்து உணர்த்துகின்றன. இது மட்டுமல்ல கோவில் வாசல்படியை தொட்டு கும்பிடுவதற்கு பின்னாலும், அறிவியல் உண்மைகள் இருக்கின்றன. கோவில் வாசல்படியை குனிந்து தொடும் பொழுது நமக்குள் ஒரு பணிவை ஏற்படுத்துகிறது. பிறகு உடம்பில் உள்ள சூரிய நா...