சாமி படங்களை எந்த திசையில் வைத்து வணங்க வேண்டும்?



*🔯பொதுவாக நம்முடைய வீட்டில் பூஜையறையில்*
நாம் வைக்க கூடிய சாமி படங்கள் மற்றும் சாமி
விக்கிரகங்களுக்கு நாம் பூஜை செய்து வழிபாடு
செய்யும் பொழுது நீங்கள் எந்த திசையில் அமர்ந்து
வழிபாடு செய்ய வேண்டும் அதுபோல நீங்கள்
வைக்கக்கூடிய சாமி படங்களும் சாமி விக்ரகங்களும்
எந்த திசையில் இருக்க வேண்டும் என்பதில்
நாம் கவனமாக இருக்க வேண்டும்.


கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு
என நான்கு திசைகள் உள்ளன. நாம் சுவாமி படங்கள்
அல்லது விக்ரகங்களை கிழக்கு அல்லது
வடக்கு திசை பார்த்து வைத்து வழிபாடு செய்யலாம்.

சுவாமி படங்கள் கிழக்கு திசை நோக்கி இருந்தால்
பூஜை செய்பவர் வடக்கு திசை நோக்கி அமர்ந்து
வழிபாடு செய்யலாம்.

 ஒருவேளை சுவாமி படம்
வடக்கு திசை நோக்கி இருந்தால் நீங்கள் கிழக்கு திசை
நோக்கி அமர்ந்து வழிபாடு செய்ய வேண்டும்.

இதுதான் நீங்கள் சரியான வழிபாடு செய்யும் திசைக்கான
சாஸ்திரம். பொதுவாக சுவாமி படங்கள்
பெண் தெய்வங்களாக இருக்கும் நிலையில் அந்த
பெண் தெய்வங்களுக்கு நேருக்கு நேராக அமர்ந்து
வழிபாடு செய்யலாம். இது பெண் தெய்வங்களை
வழிபடும் பொழுது மட்டும்தான். தெற்கு நோக்கி
சாமி படங்களை வைக்க கூடாது.
அதுபோல உடைந்த சாமிபடங்கள் சாமி விக்கிரகங்கள்
பூஜையறையில் வைக்க கூடாது.
அதுபோல் பூஜையறையில் நம்முடைய
முன்னோர்களின் படங்கள் சாமிக்கு நிகராக
இருக்க கூடாது...


*வாழ்க வளமுடன்*

Comments

Popular posts from this blog

27 நட்சத்திரத்தில் பிறந்து உள்ளவர்கள் யார் யார் என்பதை பற்றிய பதிவு

ஏன் சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது?....

18 சித்தர்கள் மூல மந்திரம்