ஒவ்வொரு ஹோமங்களுக்கான பயன்கள்
*🔯நாம் பாரம்பரியமாக ஹோமம், யாகம் செய்து வருகின்றோம்.* நாட்டிற்கே ஏற்படும் சிக்கலிலிருந்து காக்க யாகம் நடத்தப்படுவது வழக்கம். அதே போல் தனி நபருக்கு அல்லது ஒரு குடும்பத்திற்கு ஏற்படும் பிரச்னைகளிலிருந்து விடுபட செய்யப்படுவது தான் ஹோமம். ஹோமங்களின் வகைகள் என்ன அதன் பயன்கள் என்ன என்பதை இங்கு விரிவாக பார்ப்போம்... ஹோமங்களின் வகைகள் நம் அன்றாட வாழ்வில் பல தடைகள், சோதனைகளை தாண்டி தான் வெற்றியைப் பெறக் கூடிய சூழல் இருக்கிறது. இருப்பினும் நம்மால் யூகிக்க முடியாத சில தடைகள், திருஷ்டி நம்மை தொடரக்கூடும். அதனால் எதனால் நாம் பின்னடைவு அடைகின்றோம் என தெரியாமல் தவித்து வருவோம். கீழே குறிப்பிட்டுள்ள ஹோமங்களை செய்வதால் நாம் தெய்வ சக்திகள் பெற்று அனைத்திலும் வெற்றி பெற முடியும். 🔯கணபதி ஹோமம் : Ganapathi Homam காரியங்கள் தடைப்பட்டு வந்தால், அப்போது நாம் கணபதி ஹோமம் செய்ய எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி கிடைக்கும். 🔯சண்டி ஹோமம்: Chandi Homam பயம் மற்றும் நம் தரித்திரத்தின் காரணமாக பல செயல்கள் தடைப்படும். அதிலிருந்து விடுபட்டு தைரியம் ஏற்பட சண்டி ஹோமம் செய்யலாம். 🔯நவகிறஹ ஹோமம்:Nava...