Posts

Showing posts from November, 2020
 

அஷ்டமி, நவ‌மி அ‌ன்று நல்ல செயல்கள் செய்ய தயங்குவது ஏன்?

கிருஷ்ணன் பிறந்த அஷ்டமியையும், ராமன் பிறந்த நவமியையும் எல்லோரும் கொண்டாடுகிறார்கள். ஆனால், இன்னொரு பக்கத்தில் அதே நாளில் எதையும் தொடங்குவதற்கு பயப்படுகிறார்கள். இது ஏன்?  சாதாரணமாக அஷ்டமி, நவமியில் தொட்டது துலங்காது என்றொரு பழமொழி உண்டு.  ஆனால், நவராத்திரியில் வரக்கூடிய அஷ்டமி, நவமியையும், கிருஷ்ணனுக்குரிய அஷ்டமியையும், ராமனுக்குரிய நவமி ஆகிய நான்கு நாட்களும் அஷ்டமி, நவமிக்கு உகந்த நாட்கள்.  8, 17, 26 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள் அஷ்டமியில் எது வேண்டுமானாலும் செய்யலாம்.  இவர்களுக்கு அஷ்டமியால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் எதுவும் இருக்காது.  ஏனென்றால் அஷ்டமி என்பது 8வது திதி. அதனால், 8ஆம் எண்ணில் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு அது ஒத்துவரும்.  அதேபோல, 8 என்பது சனி பகவான் ஆதிக்கம் உடைய எண். மகர ராசி, கும்ப ராசிக்காரர்களும் அஷ்டமி அன்று எது வேண்டுமானாலும் செய்யலாம்.  மேலும், சனி பகவானின் ஆதிக்கம் பிறந்தவர்கள். அதாவது, ஜாதகத்தில் சனி உச்சம் அல்லது ஆட்சி பெற்றவர்களும் அஷ்டமி திதியில் எது வேண்டுமானாலும் செய்யலாம். அது அவர்களை பாதிக்காது.  நவமி என்பது 9வது திதி. 9ஆம் எண்ணில் 9, 18, 27 ஆ

கௌரவர்கள் நூறு பேர்

பாண்டவர்கள் ஐவர் நாம் நன்கு அறிவோம்.... அதுப்போல் கௌரவர்கள் நூறு பேர் : 1 துரியோதனன்- Duryodhana 2 துச்சாதனன்- Dussahana 3 துசாகன்- Dussalan 4 ஜலகந்தன் - Jalagandha 5 சமன் - Saman 6 சகன் - Sahan 7 விந்தன் - Vindhan 8 அனுவிந்தன் - Anuvindha 9 துர்தர்சனன்- Durdharsha 10 சுபாகு - Subaahu 11 துஷ்பிரதர்ஷனன் - Dushpradharsha 12 துர்மர்ஷனன் - Durmarshana 13 துர்முகன் - Durmukha 14 துஷ்கரன் - Dushkarna  15 காஞ்சநத்வாஜா - Kaanchanadhwaja 16 விகர்ணன்- Vikarna 17 சலன்- Saalan  18 சத்வன் - Sathwa 19 சுலோசனன் - Sulochana 20 சித்ரன் - Chithra 21 உபசித்ரன் - Upachithra 22 சித்ராட்சதன் - Chithraaksha 23 சாருசித்ரன்- Chaaruchithra 24 சரசனன் - Saraasana 25 துர்மதன் -Durmada 26 துர்விகன் - Durvigaaha 27 விவித்சு - Vivilsu 28 விக்தனன் - Vikatinanda 29 உர்ணநாபன் - Oornanaabha  30 சுநாபன்- Sunaabha 31 நந்தன் - Nanda 32 உபநந்தன் - Upananda 33 சித்திரபாணன்- Chithrabaana  34 அயோபாகன் - Ayobaahu 35 சித்திரவர்மன்- Chithravarma  36 சுவர்மன் - Suvarma 37 துர்விமோசன்- Durvimocha 38 மகாபாரு- Mahaabaahu  39 சித்திராங

ஐயப்பன் பற்றிய 50 தகவல்கள்

     ஐயப்பன் பற்றிய 50 தகவல்கள் 01. சபரிமலை அய்யப்பன் கோவில் சுயம் புலிங்க பூமி, யாக பூமி, பலி பூமி, யோக பூமி, தபோ பூமி, தேவ பூமி, சங்கமம் பூமி என்ற 7 சிறப்புகளைக் கொண்டது. 02. ஓம் சுவாமியே சரணம் அய்யப்பா என்றால் நம் பாவங்களை அழித்து ஞானத்தைப் பெற அய்யப்பனை சரண் அடைகிறோம் என்று பொருள். 03. ஒரு மண்டலம் விரதம் இருப்பதால் நல்ல பழக்கங்கள் ஏற்பட்டு பலரது வாழ்க்கை முறையே மாறியுள்ளது. இதனால்தான் ஆண்டுக்கு ஆண்டு அய்யப்பனை தேடி செல்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்தப்படி உள்ளது. 04. சபரிமலைக்கு முதன் முதலில் மாலை அணிந்து செல்பவர்கள் 48 மைல் கொண்ட பெரிய பாதையில் செல்ல வேண்டும் என்பது மரபு. 05. கன்னிபூஜை நடத்தி விருந்து கொடுக்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. உளமார்ந்த பக்தி ஒன்றையே அய்யப்பன் விரும்புகிறார். 06. கடன் வாங்கியாவது சபரிமலைக்கு வா... என்று தன் பக்தர்களுக்கு அய்யப்பன் ஒரு போதும் சொன்னதே இல்லை. 07. சபரிமலையை அடைந்ததும் சரணம் கூறியபடி செல்ல வேண்டும். உங்கள் கழுத்தில் உள்ள மாலை நெஞ்சில் அடிபடும் போதெல்லாம் அய்யப்பன் உங்கள் மனசாட்சியை தட்டிக் கொண்டே இருக்கிறார் என்பதை மறந்து விடாதீர்கள்.

அய்யனார் மூல மந்திரம்

🔯 கெட்ட சக்தியை விரட்டும் அய்யனார் மூல மந்திரம் 🔯 *🔯அய்யனாரை மனதார நினைத்து இந்த மந்திரத்தை தினம்தோறும் 11 முறை உச்சரித்து வரும்பொழுது நம்மை எந்த கெட்ட சக்தியும் அண்டாது.* அய்யனாரை பார்ப்பதற்கு அச்சுறுத்தும் வகையில் தோற்றம் இருந்தாலும், அவரை மனதார வேண்டி கொண்டு நாம் தொடங்கும் காரியமானது எந்த தடைகளும் இல்லாமல் வெற்றியில் முடியும். அதுமட்டுமல்லாமல் இவர் கிராமங்களில் காவல் தெய்வமாகவும் இருக்கின்றார். காவல் தெய்வமாக ஊர் எல்லையில் இருந்து கிராம மக்களை எல்லாம் காக்கும் இந்த அய்யனாரின் அருளை முழுமையாகப் பெறுவதற்கு ‘அய்யனார் மூல மந்திரத்தை’ உச்சரிப்பது மேலும் அதிக பலனை கொடுக்கும்.  *🙏ஓம் கிராமபாலாய வித்மஹே*  *கிலேஸ நாஸாய தீமஹி*  *தன்னோ சாஸ்த்ரு ப்ரசோதயாத்* அய்யனாரை மனதார நினைத்து இந்த மந்திரத்தை தினம்தோறும் 11 முறை உச்சரித்து வரும்பொழுது நம்மை எந்த கெட்ட சக்தியும் அண்டாது.  மனோதைரியமானது அதிகமாகும்.  அய்யனாரை தொடர்ந்து வழிபட்டு வர நம் வீட்டையும், நம் வீட்டைச் சேர்ந்த மக்களையும் பேய், பிசாசு, காத்து, கருப்பு கூட அண்டாது என்பது நம்பிக்கை. வீரத்தையும், துணிச்சலையும், அடையாளமாக கொண்டிருக்கும்

காசி

                            காசி காசி என்பதை ஊராகப் பாக்காமல் அதை ஒரு வாய்ப்பாகப் பார்க்க வேண்டும். காசி என்பது 168 மைல் பரப்பளவில் சிவபெருமானால் (சிவசக்தியால்) அமைக்கப்பட்ட ஒப்பற்ற, நினைப்ப தற்கே அரிய ஓர் சிவ சக்தி யந்திரம். வருடத்தின் எல்லா நாட்களும், ஒரு நாளின் எல்லா மணிநேரமும் ஓய்வின்றி செயல்படும் ஒப்பற்ற சிவ சக்திநிலை இங்கே இருப்பதாக அனைவரின் நம்பிக்கை. சிவன் வடிவமைத்த காசியின் 168 மைல் சுற்றளவில் 468 சக்தி மையங்கள். அவற்றில் 108 அடிப்படை சக்தி மையங்கள். இதில் 54 ஆண்தன்மை நிறைந்த சக்தி வடிவங்கள், 54 பெண் தன்மை நிறைந்த சக்தி மையங்களாக சிவனால் அமைக்கப்பட்ட தென்பது வரலாறு.* நிலவின் சுழற்சிக் கணக்கில், மூன்று வருடத்திற்கு ஒரு முறை 13 மாதங்கள் இருக்கும். நம் சூரிய குடும்பத்தில் இருப்பது 9 கோள்கள். 4 திசைகள் அல்லது பஞ்ச பூதங்களில் ‘ஆகாஷ்’ தவிர்த்து நான்கு அடிப்படைக் கூறுகள். ஆக, 13*9*4 = 468. நம் உடலில் இருக்கும் சக்தி சக்கரங்கள் 114. இதில் 2 நம் உடல் தாண்டி இருக்கிறது. மீதம் இருக்கும் 112ல், 4 சக்கரங்களுக்கு நாம் ஏதும் செய்ய அவசியம் இருக்காது. மற்ற 108ம் சரியாய் இருந்தால், இந்த நான்கும

ஒன்பது நவக்கிரகஆலயங்கள்

Image
ஒன்பது நவக்கிரகஆலயங்களையும் . ஒரே நாளில்  தரிசனம் செய்ய காலநேரஅட்டவணையுடன் வழிதடங்கள்  !!! ஒன்பது நவ கிரகங்கள் ஆலயங்கள் அனைத்தும் கும்பகோணம் மயிலாடுதுறை காரைக்கால் பகுதியை  சுற்றி அமைந்திருக்கின்றன. கீழ்கண்ட கால அட்டவணை படி உரிய வழி தடங்களில்  பயணம் செய்து ஒன்பது நவக்கிரக ஆலயங்களையும் ஒரே நாளில்  தரிசனம் செய்து அருள் பெற வேண்டுகிறோம். 1, திங்களூர் (சந்திரன்): ********** தரிசனம் நேரம் :1மணி நேரம் காலை 6மணி ஒன்பது  நவகிரக ஆலயங்களில் முதலில் ஆரம்பிக்கும்  வேண்டியது திங்களூர்தான். நீங்கள் பேருந்தில் செல்ல விரும்பினால் கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து  பாபநாசம், ஐயம்பேட்டை வழியாக 33 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திங்களூரை சுமார் 1 மணி நேர நேரத்தில் அடைந்து விட முடியும். இதற்கு சரியாக காலை 5.00 மணிக்கெல்லாம் கும்பகோணத்திலிருந்து நீங்கள் கிளம்ப வேண்டும். பின்னர் திங்களூர் கைலாசநாதர் கோயிலில் சுவாமி தரிசனத்தை ஒரு மணி நேரத்திற்குள் முடித்துக்கொண்டு 7 மணிக்கு ஆலங்குடி  கிளம்பலாம். 2, ஆலங்குடி (குரு) : ******* தரிசனம் நேரம்:1மணி நேரம் காலை 7.30மணி ஆலங்குடியை 30 நிமிடத்தில் அடைந்து வி

செய்யும் செயலும் அதற்கான காரணமும்

1.கன்னிகாதானம்" என்றால் என்ன? 2.திருமணம் முடிந்த பின் ஏன் பாலும், பழமும் கொடுக்கறாங்க தெரியுமா..? பிரம்மிப்பூட்டும் இரகசியம்..!! வயிற்றுப்பசியைப் போக்குகிற அன்னதானமே சிறந்தது என்று சொல்வார்கள். நிதானமே சிறந்தது என்பவர்களும் உண்டு. ஆனால், தானங்களிலேயே மிகப் பெரியதாக, மகா தானமாக சாஸ்திரம் குறிப்பிடுவது கன்னிகாதானத்தை தான்! திருமணம் செய்துவைக்கும்போது, தந்தையானவர் தான் பெற்ற பெண்ணை மற்றொரு குடும்பத்தில் பிறந்த ஆண்மகனுக்கு தானமாக அளித்து அவனிடம் ஒப்படைக்கும்  இந்த நிகழ்வையே கன்யாதானம் அல்லது கன்னிகாதானம் என்கிறார்கள்! இந்த உலகில் பலவித தானங்கள் செய்யப்பட்டாலும் அவை எல்லாவற்றிலும் உயர்ந்தது இந்த கன்னிகாதானமே என்பதற்கு இந்த நிகழ்வின்போது சொல்லப்படுகிற சங்கல்பமும், மந்திரமுமே சாட்சி. 'தசானாம்பூர்வேஷாம், தசானாம்பரேஷாம், மம ஆத்மனஸ்ச ஏகவிம்சதிகுல உத்தாரண..'  என்று அந்த மந்திரம் நீள்கிறது. அதாவது, கன்யாதானம் செய்பவனுக்கு முன்னால் உள்ள பத்து தலைமுறையும், பின்னால் வருகிற  பத்து தலைமுறையும், கன்யாதானம் செய்பவனது தலைமுறையையும் சேர்த்து ஆகமொத்தம் இருபத்தியோரு தலைமுறைகளையும் கரைசேர்க்கும்

வீட்டில் தங்கம் சேருவதற்கு பின்பற்ற வேண்டிய சில எளிய முறைகள்....!!

*🔯வீட்டில் தங்கள் சேருவதற்கு ஆன்மிக ரீதியாக சில வழிமுறைகள் உள்ளன.*  அதை சரியாக கடைபிடித்தால் வீட்டில் நிச்சயம் தங்கம்  அதிகரிக்கும். தங்கம் சேருவதற்கு அட்சய திருதி அன்று தங்கம் வாங்குவது வழக்கம்.  *🔯அதை தவிர்த்து மற்ற நாட்களில் தங்கம் வாங்க நினைப்பவர்கள்*   *⚜️பரணி, பூரம், பூராடம், போன்ற நட்சத்திரம் வரும் புதன், வெள்ளி கிழமைகளில் தங்கம் வாங்கினால் அதிர்ஷ்டம் வந்து சேரும்.* *⚜️புதிதாக தங்கம் வாங்கி அதை ஒரு சுத்தமான வெள்ளை துணியிலோ அல்லது வெள்ளை காகிதத்திலோ சுற்றி உப்பில் சிறிது நேரம் புதைத்து வைத்தால் தங்கத்தில் உள்ள தோஷங்கள் அனைத்தும் விலகும்.*  இதனால் வீட்டில் தங்கம் பெருகும். *🔯சனிக்கிழமை, ரோகிணி நட்சத்திரம்,*  அமிர்தயோகம் மூன்றும் சேர்ந்து வரும் நாளை தங்க கணபதி தினமாக அனுஷ்டித்திருக்கிறார்கள் நம்  முன்னோர்கள்.  இந்த நாளில்  *🔯காலையில் எழுந்து குளித்துவிட்டு வீட்டிலோ அல்லது கோவிலிலோ*  *🙏‘ஓம் தங்க கணபதி வஸ்ய வஸ்ய நம’*   என 108 முறை பாராயணம் செய்துவிட்டு தங்கம் வாங்கினால் தங்கம் பெருகும்.*  அதோடு இதை செய்வதால் சகலமும் கூடி வரும். லக்கினத்தில் குரு, 10ல் சந்திரன், 11ல் புதன் போன்ற

கோவில் சுவற்றில் சிகப்பு-வெள்ளை வர்ணம் பூசுவது ஏன்?! வியப்பூட்டும் 8 உண்மைகள்.

ஒவ்வொரு மனிதன் உடம்பிலும் இரத்தத்தில் வெள்ளை அணுக்கள், சிவப்பு இரத்த அணுக்கள் இருக்கும். சிவப்பு அணுக்கள் ஆக்சிஜனை நம் உடலின் எல்லா பாகங்களுக்கும் கொண்டு செல்கிறது.  வெள்ளை அணுக்கள் நோய் எதிர்ப்புச் சக்தியை நமக்கு அளிக்கிறது.இவ்விரண்டு அணுக்களும் நாம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு மிகவும் இன்றியமையாதது. இதை குறிக்க தான் வெள்ளை மற்றும் சிகப்பு நிறங்களில் கோவில்களில் சுவர்களில் பூசப்பட்டிருகின்றது . ஆண்களின் விந்து வெள்ளை நிறமுடையது, பெண்களின் கருப்பை சிகப்பு நிறத்தில் இருக்கும். இவை இரண்டும் சேர்ந்து தான் இங்கே உயிர் உண்டாகிறது. இதனையும் கோவில் சுவர் குறிப்பால் உணர்த்துகிறது. மனதில்,உடலில் உயிர் உண்டாவதை போல இறைவனின் ஆன்மா மூல ஸ்தானத்தில் இருக்கும். அதனால் தான் அதை கருவறை என்று கூறுகிறார்கள். சுவர்களில் உள்ள வர்ணங்கள் இவைகளை சான்றாக வைத்து நமக்கு வாழ்வியலையும் கூடவே சேர்த்து உணர்த்துகின்றன. இது மட்டுமல்ல கோவில் வாசல்படியை தொட்டு கும்பிடுவதற்கு பின்னாலும், அறிவியல் உண்மைகள் இருக்கின்றன. கோவில் வாசல்படியை குனிந்து தொடும் பொழுது நமக்குள் ஒரு பணிவை ஏற்படுத்துகிறது. பிறகு உடம்பில் உள்ள சூரிய நாடியை

அகிலத்தை காக்கும் அன்னையின் அதி அற்புதம்

🕉 முக்கியமான 10 வித தோற்றங்களும் பெயர்களும் 🕉 *🌟1. மாதங்கி:* என்றும் உயர்நிலையில் இருப்பவள். அனைத்து கேடுகளையும் தனதாக்கி நன்மையை பிறருக்கு அருள்பவள். *🌟2. புவனேஸ்வரி:* மென்மையான இதழ் உடையவள். பூமியை காப்பாற்றும் நாயகி. மனதில் ஏற்படும் எண்ணங்களுக்கு காரணமானவள். அழகும், சுந்தர வதனமும் நிறைந்தவள். *🌟3. பகுளாமுகி:* பயங்கர ஆயுதங்களை தாங்கியவள். முட்கள் நிறைந்த கதாயுதம் இவளின் பிரதான ஆயுதம். எதிர்பாராத நிலையில் அசுரர்களை கதாயுதத்தால் தாக்குபவள். வேகமான பயணத்தால் எதிரிகளின் குழப்பத்திற்கு காரணமானவள். *🌟4. திரிபுரசுந்தரி:* பதினாறு வயது கன்னிகையின் உருவை கொண்டவள். புதிய சிந்தனை மற்றும் புதிய கோட்பாடுகளின் மொத்த உருவம் என்றும் பிறருக்கு நுட்பமான ஞானத்தை வழங்கியவள் . சிவனின் உடலில் அமர்ந்து தியானிக்கும் உருவம் இவளுடையது. *🌟5. தாரா:* நட்சத்திரத்தை போல ஒளி வீசுபவள். தனது மஹா சக்தியை உள்ளே வைத்து எளிமையாக காட்சியளிப்பவள். *🌟6. கமலாத்மிகா:* தாமரையில் உறைபவள் என பொருள். அனைத்து சக்தியின் கிரியா சக்தியாக திகழ்பவள். அழகும் , செல்வமும் நிறைந்தவள். இவளின் வடிவத்தையே லஷ்மியாக வணங்குகிறோம். வெள்ளை

விருந்தும் மருந்தும் மூன்றே நாள் என்பதின் உண்மைப் பொருள்

கிழமைகளில்  ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய மூன்றும் *சூரிய நாட்கள்* ;  திங்கள், புதன், வெள்ளி *சந்திர நாட்கள்*.   சனி இரண்டிற்கும் *பொதுநாள்*. சூரியநாளில் மருந்தும், சந்திர நாளில் விருந்தும், சம நாளில் நீராடலையும் தமிழர் வைத்துக் கொண்டனர். *விருந்துகள் சந்திர நாட்களிலும், மருந்துகள் சூரிய நாட்களிலும் அருந்த வேண்டும் என்பதைக்  குறிக்கவே விருந்தும் மருந்தும் மூன்றே நாள் என்றனர்.* **************************************************** இதுதானே ஸ்ராத்தகால விதி உங்களுக்கு தெரிந்திருக்குமே!* ஆதிகாலத்தில் விஸ்வாமித்ரர் புகழ் பெற்ற ராஜரிஷி. ராஜ வம்சத்தை சேர்ந்தவர். ஆனால் கடுமையான தபஸ்ஸால் ப்ரஹ்மரிஷியாக உயர்ந்தவர். அதுவும் “வஸிஷ்டர் வாயால் ப்ரஹ்மரிஷி” பட்டம் பெற்றவர். ஆனால் இப்படிப்பட்டம் பெறுவதற்கு முன் அவருக்கும் வஸிஷ்டருக்கும் எப்போதும் மோதல்தான். வஸிஷ்டரிடமிருந்து காமதேனுவை பறிக்க முயன்ற காலம் முதல் நடந்த பல மோதல்களில் கீழ்கண்ட மோதலும் ஒன்று. இது ஒரு சுவையான கதை. ஒருமுறை தன் முன்னோர் ஸ்ராத்தத்துக்கு [திவஸம்] தன் குடிலுக்கு சாப்பிட வருமாறு விஸ்வாமித்ரரை வஸிஷ்டர் அழைத்தார். “அதற்கென்ன வந்தால் போ

தடைகளை நீக்கும் அம்மன் காயத்ரி மந்திரங்கள்

*🔯தடைகள் நீங்கவும், சகல காரியங்கள் வெற்றி அடையவும் ஒவ்வொரு அம்மனுக்கும் உகந்த காயத்ரி மந்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. படித்து பலன் பெறுங்கள்.* *🔯காயத்ரி - சகல காரியங்கள் வெற்றி அடைய* ஓம் பூர்புவஸ்ஸுவஹ் தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோனஹ் ப்ரசோதயாத் *🔯துர்கை:* *🔯(ராகுதோஷ நிவர்த்திக்காக)* ஓம் காத்யாயனாய வித்மஹே கன்யகுமரி தீமஹி தன்னோ துர்கிஹ் ப்ரசோதயாத் ஓம் சிம்மத் வஜாய வித்மஹே சூல ஹஸ்தாய தீமஹி தன்னோ மாரி ப்ரசோதயாத் *🔯அன்னபூரணி தேவி* (நித்தியான்ன பிராப்திக்காக)* ஓம் பக்வத்யைஹ் வித்மஹே மஹேஸ்வர்யைஹ் தீமஹி தன்னோ அன்னபூர்ண ப்ரசோதயாத் *🔯சிவதூதி:* ஓம் சிவதூத்யை ச வித்மஹே சிவங்கர்யைச தீமஹி தன்னோ நித்யஹ் ப்ரசோதயாத் *🔯பாலா:* ஓம் திருபுரசுந்தரீ வித்மஹே காமேஸ்வரீ ச தீமஹி தன்னோ பாலா ப்ரசோதயாத் *🔯அம்ருதேஸ்வரி தேவி* (ஆயுள் ஆரோக்கியம் பெற) ஓம் சௌஹ் த்ரிபுரதேவி ச வித்மஹே சக்தீஸ்வரீ ச தீமஹி தன்னோ அம்ருத ப்ரசோதயாத் *🔯காளிகா தேவி:* (கேட்ட வரம் கிடைக்க) ஓம் காளிகாயை ச வித்மஹே ஸ்மசான வாசின்யை தீமஹி தன்னோ கோரா ப்ரசோதயாத் *🔯கவுமாரி தேவி:* (சக்தி பெற) ஓம் சிகித்வஜாயை வித்மஹே வஜ்ர (சக்தி

சில விசித்திர பரிகாரங்கள்

1.விநாயகருக்கு சுண்டைக்காய் மலர் வைத்து வழிபட உடலில் உள்ள தீய சக்திகள் விலகி ஓடும் . 2.வெளியில் செல்லும் பொழுது எதிரில் பிணம் தென்பட்டாலோ அல்லது பிணம் எரிவதை தற்செயலாக பார்க்க நேரிட்டாலோ சில நாணயங்களை பூமியில் போட்டு விட்டு அவ்விடத்தை விட்டு செல்ல, அந்த ஆத்மவினால் ஏற்படும் எதிர் மறை விளைவுகள் ஏற்படாமல் இருக்கும். 3.தினசரி வீட்டை விட்டு கிளம்புமுன் நீர் நிரம்பிய பாத்திரமோ அல்லது நீர் நிரம்பிய பக்கெட்/தொட்டி /குளம் பார்த்து செல்ல, போகிற விஷயம் சுபமாய் முடியும். 4.கொடுத்த கடன் திரும்ப வரவில்லை எனில் உங்கள் இஷ்ட தெய்வத்திற்கு தினசரி 43 நாட்கள் நீல நிற பூவை வைத்து வேண்டி வர கடன் வசூலாக ஆரம்பிக்கும். 5.அண்டை அயலார் மூலம் தொடர்ந்து தொல்லைகள் ஏற்பட்டால் தினசரி வீட்டு முன் 3 மெழுகுவர்திகளை ஏற்றி வேண்டி வர தொல்லைகள் நீங்கும் . 6.எதிரிகள் தொல்லை மற்றும் சோதனைகள் அதிகமானால் வெள்ளிக்கிழமைகளில் உப்பு சேர்க்காமல் சாப்பிட்டு வர, எதிரிகள் நிலை செயல் இழந்து போகும். 7.சாம்பிராணி தூபம்.. வெண்கடுகு ,நாய்க்கடுகு ,மருதாணி விதை ,சாம்பிராணி , அருகம்புல் வில்வ இலை , வேப்ப இலை இவைகளை நன்றாக காய வைத்து துளாக்கி ச

பேச்சியம்மன்

*🔯பேய்களை அடக்கி ஆளும் தன்மைக் கொண்டவள்* *🔯பேச்சி அம்மன்* பெயர்க்காரணம்⚔ பேய்களை அடக்கி ஆளும் தன்மைக் கொண்டவள் என்பதால் பேய்ச்சி அம்மன் என்று அழைக்கப்பட்டாள்  அது திரிந்து பேச்சியம்மன் என்றாயிற்று என்றும்  சிவபெருமான் பிரம்மகத்தி தோஷம் பிடிக்க அதை நிவர்த்தி செய்ய பார்வதிதேவி அரும்பாடு பட சிவபெருமான் பிரம்மபீடத்தில் பிரம்பு எடுத்து அடிக்கும் போது பார்வதியின் அம்சம் கொண்ட இரண்டு பெண் குழந்தைகள் பிறக்கின்றனர்... முதலில் பிறந்த குழந்தை பிறந்தவுடன் பேசியதால் பேச்சி என்றழைக்கப்பட்டாள் என்றும் சில இடங்களில் அவளுடைய பெயர்க்காரணம் இடத்திற்கு இடம் ஏற்றவாறு மாறுபடுகிறது.... *🔯தோற்றம்:* உருண்டை கண்களும் நீண்ட நாக்கும் வீரப்பல்லும் விரித்த சடையும் தலையில் அக்னி கிரீடமும் என பேச்சியம்மன் மிகவும் பயங்கரமான அழகான தோற்றம் கொண்டு காணப்படுவாள்..  *🔯அவளிடம் இருப்பவை:* திரிசூலம், பிரம்பு,கபால பாத்திரம், கத்தி,வாள்,சீலைப்பிள்ளை, (பக்தி) கிலுக்கு,உடுக்கை,மண்டையோடு,சாட்டை *🔯பேச்சியம்மன் பற்றிய தகவல்கள்* பார்வதிதேவி சிவபெருமானின் சாபத்தால் காட்டில் வனப்பேச்சியம்மனாக அவதாரம் எடுத்தாள்... சிவபெருமானே பேச்சி

பிரபஞ்ச சக்தி

பிரபஞ்ச சக்தி என்றால் என்ன ? இந்த சக்தி இந்த பிரபஞ்சம் முழுவதும் நிறைந்து இருக்கின்றது.   இது இயற்கையாகவே எல்லா உயிரினத்திலும் உள்ளது.  நாம் நம்முடைய செயற்கையான வாழ்கைமுறையின் மூலம் நம்முடைய சக்தியை பெருமளவு இழந்துவிட்டோம். மீதம் இருப்பது நம்மையும் அறியாமல் நாம் செய்யும் சுவாசத்தின் மூலமும் அவ்வப்போது நாம் செய்யும் தியானம் மற்றும் இறைவழிபாடு மூலமும் தான். இந்த பிரபஞ்ச சக்தியை பெற வேண்டும் என்றால் நாம் செய்ய வேண்டுவது தியானம் அல்லது இறைவழிபாடு போன்றவைதான். இதில் தியானம் என்பது நாம் நினைப்பது போல முற்றும் துறந்த நிலை அல்ல.  மாறாக தியானம் என்பது ஒரு சுவாச பயிற்சியே ஆகும்.  நல்ல அமைதியான காற்றோட்டமான இடத்தில் அமர்ந்து ரிலாக்ஸாக உங்களுக்கு பிடித்தமான ஒன்றை நினைத்து கொண்டு இருந்தாலெ போதும் உன்கள் உடம்பு தானாக பிரபஞ்ச சக்தியை கிரகிக்க ஆரம்பிக்கும். ஆனால் நீங்கள் சிந்திக்கும் விஷயம் நேர்மறையாகவும் உங்கல் மனதிற்கு அமைதியை தரகூடியதாகவும் இருக்க வேண்டும்.  இந்த நிலை உங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்க கூடியதாகவும் உங்கள் உடம்பை நீங்கள் தள்ளி நின்று மனதளவில் ரசிக்க கூடிய நிலையிலும் இருக்க வேண்டும். பலர்

மந்திரங்கள்

ப்ரம்மமும் மாயையும் சேர்ந்தது தான் நான்..! மந்திரங்கள்...! மந்திரங்கள் என்பவை நீண்ட நெடிய வாக்கியங்களோ கவிதைகளாகவோ இருக்க வேண்டியது இல்லை.  ஓரிரு எழுத்துக்களிலேயே கூட மந்திரங்கள் உள்ளன.  இவை பீஜ மந்திரங்கள் என்று அழைக்கப் படுகின்றன.  அதாவது மனித முயற்சிக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியின் விதை இந்த ஓரிரு எழுத்துக்களில் அமைந்துள்ள மந்திரங்கள் ஆகும். உதாரணமாக இயற்கையில் ஒவ்வொரு சக்தியை குறிக்கவும் ஒரு சொல் அல்லது மந்திரம் உள்ளது.  உதாரணமாக ஐம்பூதங்கள் ஒவ்வொன்றையும் குறிக்கும் மந்திரங்களைச் சொல்லலாம்.  ஹம் (ஆகாயம்),  யம் (காற்று),  நெருப்பு (ரம்),  நீர் (வம்)  மற்றும் லம் (நிலம்)   ஆகியவை ஆகும்.  🌞ஓம் என்ற ஒலிக்கு எந்த அர்த்தமும் இல்லை ... 🌞இது நாதத்தின் மூன்று நிலைகளைக் குறிப்பது.. 🌞ஓம் > ஆ + ஊ + ம்  பிரிந்து நின்றால் நாதம் பிறக்கும் ... 🌞ஒன்றானால் நாதமற்ற ஒலியாகும் ... 🌞ஓம் என்ற ஒலிக்கு மிகுந்த சக்தி உண்டு ... 🌞இதில் 'ஆ' என்பது அணுத்துகளின் எலெக்ட்ரானைக் குறிக்கிறது .. 🌞'ஊ' என்பது புரோட்டானைக் குறிக்கிறது .. 🌞 'ம்' என்பது நியூட்ரானைக் குறிக்கிறது ... இது போல

நவராத்திரி

*🔯நவராத்திரி 2020 எப்போது? பூஜை முறைகளும், சரியான நேரங்களை தெரிந்துகொள்ளுங்கள்,* *🔯அன்னையின் சக்தி ரூபத்தை அனுஷ்டிக்கும் விதமாக, வழிபடும் விதமாக கடைப்பிடிக்கும் விரதங்களில் நவராத்திரி விரதம் மிக முக்கியமானது.*  அன்னையின் அதிதேவதையாக விளங்கும் சக்தியைப் போற்றும் விதமாக நவராத்திரி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. அன்னையின் சக்தி ரூபத்தை அனுஷ்டிக்கும் விதமாக, வழிபடும் விதமாக கடைப்பிடிக்கும் விரதங்களில் நவராத்திரி விரதம் மிக முக்கியமானது.  அன்னையின் அதிதேவதையாக விளங்கும் சக்தியைப் போற்றும் விதமாக நவராத்திரி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது இந்தியாவில் பல பண்டிகைகள் கொண்டாடப்படுவது வழக்கம். ஒவ்வொன்றின் பின் பல புராண நிகழ்வுகள் நடந்திருப்பதை, புராண கதைகள் மூலம் அறிந்து கொள்ள முடியும். அந்த வகையில் நவராத்திரி என்ற 9 நாட்கள் நடக்கக் கூடிய பெரிய பண்டிகையை நாடுமுழுவதும் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது.  உலகம் முழுவதும் கோவிட் -19 தாக்கத்தின் காரணமாக முடங்கி இருந்த நிலையில் தற்போது, பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றது. *🔯நவராத்திரி எப்போது?* மகாளய அமாவாசைக்கும், மகா

18 சித்தர்கள் மூல மந்திரம்

சித்தர்களின் மந்திரத்தை எவர் ஒருவர் ஜெபிக்கிறாரோ அவருக்கு சித்தர்களின் பரிபூரணம் அருள் கிடைக்கும். *அகத்தியர் மூல மந்திரம்* ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி *போகர் மூல மந்திரம்* ஓம் ஆம் ஊம் ஸ்ரீ மகாபோகர் சித்த சுவாமியே போற்றி *திருமூலர் மூல மந்திரம்* ஓம் ஸ்ரீம் கெம் ஸ்ரீ மூலநாத சித்த சுவாமியே போற்றி *இடைக்காடர் மூல மந்திரம்* ஓம் ஸ்ரீம் ருணம் ஸ்ரீ இடைக்காட்டு சித்த சுவாமியே போற்றி *கருவூரார் மூல மந்திரம்* ஓம் ஸ்ரீம் வம் லம் ஸ்ரீ கருவூர் சித்த சுவாமியே போற்றி *கோரக்கர் மூல மந்திரம்* ஓம் ஸ்ரீம் க்லம் ஸ்ரீ கோரக்க சித்த சுவாமியே போற்றி *குதம்பை சித்தர் மூல மந்திரம்* ஓம் ஸ்ரீம் சம் ஸ்ரீ குதம்பைச் சித்த சுவாமியே போற்றி *பாம்பாட்டி சித்தர் மூல மந்திரம்* ஓம் ஸ்ரீம் வசி ஸ்ரீ பாம்பாட்டி சித்த சுவாமியே போற்றி *சட்டைமுனி மூல மந்திரம்* ஓம் ஸ்ரீம் சம் வம் சட்டைமுனி சுவாமியே போற்றி  *சிவவாக்கியர் மூல மந்திரம்* ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ சிவவாக்கிய சித்த சுவாமியே போற்றி *சுந்தரானந்தர் மூல மந்திரம்* ஓம் ஸ்ரீம் ஆம் ஊம் ஸ்ரீ சுந்தரானந்த சித்த சுவாமியே போற்றி *கொங்கணர் மூல மந்திரம்* ஓம் ஸ்ரீம்

அற்புத பலன்கள் தரும் அறுபத்து மூவர் போற்றி

அறுபத்து மூவர் நாயன்மார்கள் போற்றிகளை தினமும் படிக்க குருவருள் திருவருளால்  வாழ்வில் நல்ல முன்னேற்றம் நன்மைகள் பல கிடைக்கும்  ஓம் அதிபத்த நாயனாரே போற்றி ஓம் அப்பூதியடிகளே போற்றி ஓம் அமர்நீதி நாயனாரே போற்றி ஓம் அரிவாட்டாயரே போற்றி ஓம் ஆனாய நாயனாரே போற்றி ஓம் இசைஞானியாரே போற்றி ஓம் இடங்கழி நாயனாரே போற்றி ஓம் இயற்பகை நாயனாரே போற்றி ஓம் இளையான்குடி மாறரே போற்றி ஓம் எறிபத்தரே போற்றி ஓம் ஏனாதி நாதரே போற்றி ஓம் ஏயர்கோன் கலிக்காமரே போற்றி ஓம் ஐயடிகள் காடவர்கோனே போற்றி ஓம் கணநாதரே போற்றி ஓம் கணம்புல்லரே போற்றி ஓம் கண்ணப்பரே போற்றி ஓம் கலிக்கம்பரே போற்றி ஓம் கலிய நாயனாரே போற்றி ஓம் சுழற்றறிவாரே போற்றி ஓம் சுழற்சிங்கரே போற்றி ஓம் காரி நாயனாரே போற்றி ஓம் காரைக்கால் அம்மையே போற்றி ஓம் குங்கிலியக்கலியரே போற்றி ஓம் குலச்சிறையாரே போற்றி ஓம் கூற்றுவ நாயனாரே போற்றி ஓம் கோட்புலி நாயனாரே போற்றி ஓம் கோச்செங்கட் சோழரே போற்றி ஓம் சடைய நாயனாரே போற்றி ஓம் சண்டேசுவரரே போற்றி ஓம் சக்தி நாயனாரே போற்றி ஓம் சாக்கிய நாயனாரே போற்றி ஓம் சிறுத்தொண்டரே போற்றி ஓம் சிறப்புலி நாயனாரே போற்றி ஓம் சுந்தரரே போற்றி ஓம் செருத்து

பிரதோஷ_நந்தி_108_போற்றி

ஓம் அன்பின் வடிவே போற்றி ஓம் அறத்தின் உருவே போற்றி ஓம் அகிலத்தைக் காப்பாய் போற்றி ஓம் அரனுக்குக் காவலனே போற்றி ஓம் அரியாய்வந்து அமர்ந்தவனே போற்றி ஓம் அம்பலக் கூத்தனே போற்றி ஓம் ஆலயத்தின் முன் இருப்பாய் போற்றி ஓம் இருளை ஒழிப்பவனே போற்றி ஓம் இடபமே போற்றி ஓம் இடர்களைத் தடுப்பவனே போற்றி ஓம் இகாபரசுகம் அளிப்பவனே போற்றி ஓம் ஈகை உடையவனே போற்றி ஓம் உலக ரட்சகனே போற்றி ஓம் உபதேச காரணனே போற்றி ஓம் ஊக்க முடையவனே போற்றி ஓம் எருது உருவம் கொண்டவனே போற்றி ஓம் எங்களுக்கு வரம் தருபவனே போற்றி ஓம் ஏவல்களை ஒழித்தவனே போற்றி ஓம் ஐயன் பால் அமர்ந்த வனே போற்றி ஓம் ஒப்பில்லாதவனே போற்றி ஓம் ஓங்கார வடிவானவனே போற்றி ஓம் ஒளடதமாய் இருப்பவனே போற்றி ஓம் கணநாயகனே போற்றி ஓம் கஷ்டங்களைப் போக்குவாய் போற்றி ஓம் கல்யாண மங்களமே போற்றி ஓம் கலைகள் பலதெரிந்தோய் போற்றி ஓம் கற்பகத் தருநிழல் அமர்ந்தாய் போற்றி ஓம் கஸ்தூரி நிறம் ஒளி அணிந்தாய் போற்றி ஓம் கவலைகளை ஒழிக்கும் வல்லவனே போற்றி ஓம் காலனுக்கும் காவலனே போற்றி ஓம் கிரிவல்லயன் துணையே போற்றி ஓம் கீர்த்திகள் பல பெற்றாய் போற்றி ஓம் குணநிதியே போற்றி ஓம் குற்றம் களைவாய் போற்றி ஓம் கூத

வீடு கிரகப்பிரவேசம்

*🔯நம் வீட்டில் நடைபெறும் முக்கிய விசேஷங்களில் கிரகப்பிரவேசமும் ஒன்று.*  வாழ்நாள் முழுவதும் வசிப்பதற்கு சொந்த வீடு ஒன்று இருப்பது அவசியம். பலருக்கு சொந்த  வீட்டில் வாழவேண்டும் என்பது ஒரு மாபெரும் கனவாக இருக்கும்.  குருவி சேர்ப்பது போன்று சிறுக சிறுக சேமித்தும், நகை வீற்றும், கடன் வாங்கியும் ஆசை ஆசையாகக் கட்டிய வீட்டிற்குச் செல்ல நல்ல நாள் பார்ப்பது அவசியமல்லவா..  ஆம்! கிரகப்பிரவேசம் செய்வதென்றால் நல்லசெய்திகள்வீடு கிரகப்பிரவேசம் எந்த மாதத்தில் செய்யலாம்? எந்த மாதத்தில் செய்யக்கூடாது? நம் வீட்டில் நடைபெறும் முக்கிய விசேஷங்களில் கிரகப்பிரவேசமும் ஒன்று.  வாழ்நாள் முழுவதும் வசிப்பதற்கு சொந்த வீடு ஒன்று இருப்பது அவசியம். பலருக்கு சொந்த  வீட்டில் வாழவேண்டும் என்பது ஒரு மாபெரும் கனவாக இருக்கும்.  குருவி சேர்ப்பது போன்று சிறுக சிறுக சேமித்தும், நகை வீற்றும், கடன் வாங்கியும் ஆசை ஆசையாகக் கட்டிய வீட்டிற்குச் செல்ல நல்ல நாள் பார்ப்பது அவசியமல்லவா..  ஆம்! கிரகப்பிரவேசம் செய்வதென்றால் நல்ல நாள், நல்ல கிழமை, நல்ல மாதம், உகந்த லக்னம் என அனைத்தும் பார்க்க வேண்டியது கட்டாயமாகும்.  இந்த கிரகப்பிரவேச  சட

வாஸ்துவில் ஈசானியம்... வாஸ்துவில் ஈசானிய பாதிப்பு

நாம் வசிக்கும் வீட்டில் வடக்கு மற்றும் கிழக்கு சேருமிடத்தை வடகிழக்கு என்போம். இதற்கு ஈசான்ய மூலை என்றும், ஜலமூலை, சனிமூலை, என்றும், பெயர்கள், உண்டு. இந்த வடகிழக்கு மூலையை எப்போழுதுமே, அடைப்பு இல்லாமல் திறந்தே வைக்க வேண்டும். அதில், குறிப்பாக மெயின் வாசல் வரவேற்பு அறையில் இருக்கவேண்டும். தலைவாசல் அருகே   ஜன்னல்கள் வர வேண்டும். கதவு மற்றும் சன்னல் மூலம் நல்ல காற்றோட்டம் மற்றும் சூரிய வெளிச்சம் வரக்கூடிய அளவிற்கு, திறந்து இருப்பது சிறப்பு.  நீங்கள் ஜன்னலை திறந்தால் சாலைகள் அல்லது வாசல் மற்றும் வானம் தெரிய வேண்டும். ஈசானியத்தில் திறந்த அமைப்பில் உள்ள வீட்டில், வசிப்பவர்கள் தங்கள், தங்களுடைய வேலை என்னவோ அதனை மட்டும் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். இதனால் சண்டை சச்சரவு என்பதே ஒரு மனிதனின் வாழ்வில் அமையாது.எப்போதும் சந்தோஷமாகவே, இருப்பார்கள்.  வடகிழக்கு மூடிய அமைப்பில் வீடு இருந்தால், என்ன தவறுகள் என்பதைப் பற்றி பார்ப்போம்.  உடல் நலம் சார்ந்த பாதிப்புகள், மற்றும்  தொழில் முன்னேற்றம் தடைபடும். செல்வ வளர்சியில் தடை ஏற்படும். செய்யக்கூடிய அனைத்து வேலைகளிலும் தடங்கல்கள் ஏற்பட்டு திரும்ப ஒரு வேலையை

பக்தித் தொண்டில் ஒன்பது முறைகள்

        🌹ஸ்ரவணம் கீர்தனம் விஷ்ணோ:          🌹 ஸ்மரணம் பாத – ஸேவனம்🌹        🌹அர்சனம் வந்தனம் தாஸ்யம்🌹        🌹ஸ்க்யம் ஆத்ம – நிவேதனம்🌹 🔯 1. முழு முதற் கடவுளின் நாமங்கள், பெருமைகளை கேட்டல்  🔯 2. அவரது பெருமைகளைப் பாடுதல்  🔯 3. பகவானை நினைவிற் கொள்ளுதல்  🔯 4. பகவனானுக்குப் பாத சேவை செய்தல்   🔯 5. விக்கிரகத்தை வழிபடுதல்   🔯 6. பகவான் முன் விழுந்து வணங்குதல்   🔯 7. பகவானின் சேவகனாக செயற்படுதல்    🔯8. பகவானுடன் நண்பனாகப் பழகுதல்     🔯 9. பகவானிடம் பூரணமாக சரணாகதி                                                         அடைதல் 🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊     🌺  திருமாலின் ஐந்து நிலைகள் 🌺        ********************************************** 🌿  பரநிலை 🌿  வியூஹ நிலை 🌿  விபவ நிலை 🌿  அந்தர்யாமி நிலை 🌿  அர்ச்சை நிலை 🌹 அர்ச்சை நிலையின் சிறப்பு 🌹 அர்ச்சை நிலையின் வகைகள் 🌹 எட்டு ஸ்வயம் வியக்த க்ஷேத்திரங்கள் 🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊        🍁 திருமாலின் ஐந்து நிலைகள் 🍁            ++++++++++++++++++++++++++++++++ 🍎 அடியார்களுக்கு அருள்புரிவதற்காக ஐந்து விதமான