மந்திரங்கள்

ப்ரம்மமும் மாயையும் சேர்ந்தது தான் நான்..!

மந்திரங்கள்...!

மந்திரங்கள் என்பவை நீண்ட நெடிய வாக்கியங்களோ கவிதைகளாகவோ இருக்க வேண்டியது இல்லை. 

ஓரிரு எழுத்துக்களிலேயே கூட மந்திரங்கள் உள்ளன. 

இவை பீஜ மந்திரங்கள் என்று அழைக்கப் படுகின்றன. 

அதாவது மனித முயற்சிக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியின் விதை இந்த ஓரிரு எழுத்துக்களில் அமைந்துள்ள மந்திரங்கள் ஆகும்.

உதாரணமாக இயற்கையில் ஒவ்வொரு சக்தியை குறிக்கவும் ஒரு சொல் அல்லது மந்திரம் உள்ளது. 

உதாரணமாக ஐம்பூதங்கள் ஒவ்வொன்றையும் குறிக்கும் மந்திரங்களைச் சொல்லலாம். 

ஹம் (ஆகாயம்), 
யம் (காற்று), 
நெருப்பு (ரம்), 
நீர் (வம்) 
மற்றும் லம் (நிலம்) 
ஆகியவை ஆகும். 

🌞ஓம் என்ற ஒலிக்கு எந்த அர்த்தமும் இல்லை ...

🌞இது நாதத்தின் மூன்று நிலைகளைக் குறிப்பது..

🌞ஓம் > ஆ + ஊ + ம் 
பிரிந்து நின்றால் நாதம் பிறக்கும் ...

🌞ஒன்றானால் நாதமற்ற ஒலியாகும் ...

🌞ஓம் என்ற ஒலிக்கு மிகுந்த சக்தி உண்டு ...

🌞இதில் 'ஆ' என்பது அணுத்துகளின் எலெக்ட்ரானைக் குறிக்கிறது ..

🌞'ஊ' என்பது புரோட்டானைக் குறிக்கிறது ..

🌞 'ம்' என்பது நியூட்ரானைக் குறிக்கிறது ...



இது போல ஓரிரு எழுத்துக்களிலேயே ஏராளமான மந்திரங்கள் உண்டு. 

எல்லா மந்திரத்துக்கும் தாயாக கருதப்படும் மந்திரம் ஓம் என்னும் மந்திரம் ஒரே எழுத்தில் அமைந்ததே.

மநநாத் த்ராயதே இதி மந்த்ர: – மனனம் செய்வதால் காப்பாற்றுவதே மந்திரம் என்றொரு சொல்வழக்கு உண்டு. 

பீஜ மந்திரங்களை மனனம் செய்வதால் அந்தந்த மந்திரத்துக்குரிய சக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை. 

ஒவ்வொரு தேவதைக்கும் ஒரு பீஜ மந்திரம் உண்டு, அல்லது ஒவ்வொரு பீஜ மந்திரத்துக்கும் ஒரு தேவதை உண்டு.

உதாரணமாக சக்திக்கு (மாயை) உரிய மந்திரம் ஹ்ரீம் ஆகும்.

ஹ்ரீம் என்பதையும் பிரித்தால் ஹ + ர + இ + ம என்று ஆகிறது. 

ஹ என்பது ஆகாயம் (ஹம்), ர என்பது நெருப்பு (ரம்), இ என்பது அர்த்தநாரீஸ்வரர், ம என்பது நாதபிந்து என்று ஒவ்வொரு எழுத்தும் ஒவ்வொரு சக்தியைக் குறிக்க, அந்த சக்தியெல்லாம் திரண்டு இந்த மந்திரத்தில் இருப்பதாகக் கருதப்படுகிறது.

நான் என்ற சொல்லைக் குறிக்க சம்ஸ்க்ருதத்தில் அஹம் என்ற சொல்ல வேண்டும். 

அஹம் என்பதைப் பிரித்தால் அ என்பது ப்ரம்மத்தையும் ஹ என்பது மாயையும் குறிக்கும். 

ப்ரம்மமும் மாயையும் சேர்ந்ததுதான் நான் என்று ஆச்சரியமாக விளக்கம் கூறுவர். 

மந்திர சாதனை என்பது ஆன்மீகத்தில் தனி துறை ஆகும். 

இதில் ஈடுபடுவோர் சம்ஸ்க்ருத எழுத்துக்கள் உச்சரிப்புகள் ஆகியவற்றை தெளிவாக தெரிந்த பின்னரே ஈடுபட இயலும்.

மேற்கத்திய மொழிகளில் எழுத்து (alphabets), உச்சரிக்கும் ஒலி ஆகியவை முதிராத நிலையிலேயே பெரும்பாலும் மேற்கத்திய மொழிகள் உள்ளன. 

அதனால் அவற்றில் எழுத்துக்கும் ஒலிக்கும் தொடர்பு மிக நெருங்கியதாக இல்லை. 

ஆனால் கிழக்கத்திய நாட்டு மொழிகளில் குறிப்பாக இந்திய மொழிகள் பல ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை. 

இவற்றில் எழுத்துக்கும் உச்சரிப்புக்கும் நெருங்கிய துல்லியமான தொடர்பு உள்ளது. 

அதனால் மந்திரங்கள் இயற்றுவது அவற்றை எழுதி உச்சரிப்பது சாத்தியம் ஆகிறது...

ஓம் ஓம் ஓம்..!

ஆன்மீக வாழ்க்கைக்கு மந்திர ஜெபம் அவசியம் என்பதை அனைவருக்கும் எடுத்துரைத்து அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்...!


Comments

Popular posts from this blog

27 நட்சத்திரத்தில் பிறந்து உள்ளவர்கள் யார் யார் என்பதை பற்றிய பதிவு

ஏன் சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது?....

18 சித்தர்கள் மூல மந்திரம்