வாஸ்துவில் ஈசானியம்... வாஸ்துவில் ஈசானிய பாதிப்பு
நாம் வசிக்கும் வீட்டில் வடக்கு மற்றும் கிழக்கு சேருமிடத்தை வடகிழக்கு என்போம். இதற்கு ஈசான்ய மூலை என்றும், ஜலமூலை, சனிமூலை, என்றும், பெயர்கள், உண்டு. இந்த வடகிழக்கு மூலையை எப்போழுதுமே, அடைப்பு இல்லாமல் திறந்தே வைக்க வேண்டும். அதில், குறிப்பாக மெயின் வாசல் வரவேற்பு அறையில் இருக்கவேண்டும். தலைவாசல் அருகே
ஜன்னல்கள் வர வேண்டும். கதவு மற்றும் சன்னல் மூலம் நல்ல காற்றோட்டம் மற்றும் சூரிய வெளிச்சம் வரக்கூடிய அளவிற்கு, திறந்து இருப்பது சிறப்பு. நீங்கள் ஜன்னலை திறந்தால் சாலைகள் அல்லது வாசல் மற்றும் வானம் தெரிய வேண்டும்.
ஈசானியத்தில் திறந்த அமைப்பில் உள்ள வீட்டில், வசிப்பவர்கள் தங்கள், தங்களுடைய வேலை என்னவோ அதனை மட்டும் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். இதனால் சண்டை சச்சரவு என்பதே ஒரு மனிதனின் வாழ்வில் அமையாது.எப்போதும் சந்தோஷமாகவே, இருப்பார்கள்.
வடகிழக்கு மூடிய அமைப்பில் வீடு இருந்தால், என்ன தவறுகள் என்பதைப் பற்றி பார்ப்போம்.
உடல் நலம் சார்ந்த பாதிப்புகள், மற்றும்
தொழில் முன்னேற்றம் தடைபடும். செல்வ வளர்சியில் தடை ஏற்படும்.
செய்யக்கூடிய அனைத்து வேலைகளிலும் தடங்கல்கள் ஏற்பட்டு திரும்ப ஒரு வேலையை இரண்டு தடவைகள் செய்யும் அமைப்பு ஏற்படும்.
விபத்து ஏற்பட்டு உடலில் எங்கும் காயம் ஏற்படாமல் தலையில் மட்டுமே, அடிபடும்.மற்றும் ஆண்களுக்கு வேலையில் அதிக நாட்டம் இருக்காது.
இது போல ஈசானியம் பாதிப்பு உள்ள வீடுகளில் உள்ளவரின் நிலைமை கோமா நிலையில் உள்ளதுபோல் தோன்றக்கூடும்.
வீட்டின் முதல் வாரிசு ஆண் என்றால் தந்தை மகன் உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்பு உண்டு.
ஈசான்யம் என்பது நமக்கு தலைப்பகுதிக்கு ஒப்பானது. தலையில் எப்படி கண், காது, மூக்கு, வாய், மூளை இதுபோல மிக முக்கியமான பாகங்கள் உள்ளதோ, அதுபோல் ஒரு வீட்டிற்கு மிக முக்கிய பங்கினை கொண்டது இந்த வடகிழக்கு ஈசான்ய இடம் ஆகும்.
நன்றி வணக்கம்..
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Comments
Post a Comment