பேச்சியம்மன்
*🔯பேய்களை அடக்கி ஆளும் தன்மைக் கொண்டவள்*
*🔯பேச்சி அம்மன்*
பெயர்க்காரணம்⚔
பேய்களை அடக்கி ஆளும் தன்மைக் கொண்டவள் என்பதால் பேய்ச்சி அம்மன் என்று அழைக்கப்பட்டாள்
அது திரிந்து பேச்சியம்மன் என்றாயிற்று என்றும்
சிவபெருமான் பிரம்மகத்தி தோஷம் பிடிக்க அதை நிவர்த்தி செய்ய பார்வதிதேவி அரும்பாடு பட சிவபெருமான் பிரம்மபீடத்தில் பிரம்பு எடுத்து அடிக்கும் போது பார்வதியின் அம்சம் கொண்ட இரண்டு பெண் குழந்தைகள் பிறக்கின்றனர்...
முதலில் பிறந்த குழந்தை பிறந்தவுடன் பேசியதால் பேச்சி என்றழைக்கப்பட்டாள் என்றும் சில இடங்களில் அவளுடைய பெயர்க்காரணம் இடத்திற்கு இடம் ஏற்றவாறு மாறுபடுகிறது....
*🔯தோற்றம்:*
உருண்டை கண்களும் நீண்ட நாக்கும் வீரப்பல்லும் விரித்த சடையும் தலையில் அக்னி கிரீடமும் என பேச்சியம்மன் மிகவும் பயங்கரமான அழகான தோற்றம் கொண்டு காணப்படுவாள்..
*🔯அவளிடம் இருப்பவை:*
திரிசூலம், பிரம்பு,கபால பாத்திரம், கத்தி,வாள்,சீலைப்பிள்ளை, (பக்தி) கிலுக்கு,உடுக்கை,மண்டையோடு,சாட்டை
*🔯பேச்சியம்மன் பற்றிய தகவல்கள்*
பார்வதிதேவி சிவபெருமானின் சாபத்தால் காட்டில் வனப்பேச்சியம்மனாக அவதாரம் எடுத்தாள்...
சிவபெருமானே பேச்சியம்மனுக்கு மகனாக சுடலை மாடன் ரூபம் கொண்டார்....
இருவரும் பூலோகம் சென்று மக்களை காக்கும் தொழிலினை மேற்கொண்டனர்...21 பந்தி தெய்வங்களில் பேச்சியம்மன் மிக முக்கியமான வன தேவதையாக இருக்கிறாள்...
சில கோவில்களில் 21 பந்தி தெய்வங்களில் சுடலைமாடன் இடம் பெறுவதில்லை ஆனால் கண்டிப்பாக பேச்சியம்மன் இடம் பெறுவாள்...
ஏனெனில் சக்தி அம்சத்தில் சிவன் அடக்கம் என்பதால் பேச்சியம்மன் எல்லா 21 பந்தி தெய்வங்களில் முதன்மையான காவல்காரியாக மக்களுக்கு அருள்புரிகிறார்....
பேச்சியம்மன் எல்லா கருப்பன் மற்றும் மாடன்மார்களுக்கு மிகவும் பிரியமானவள் ஆவாள்..
21 பந்தியில் உள்ள தெய்வங்கள் இவளின் உத்தரவை ஏற்று நடப்பார்கள்...
சுடலைமாடன் தனது தாயான பேச்சியம்மனிடம் உத்தரவு பெற்று தான் வேட்டைக்கு செல்வார்...
வனப்பேச்சியம்மன் ஆண் காவல்கார்களான அய்யன்,இருளப்பன், கருப்பன்,மாடன் போன்ற தெய்வங்களுக்கு நிகரான பெண் காவல்காரி ஆவாள்...
எனவே தான் வனப்பேச்சியம்மன் அய்யன்,கருப்பன்,இருளன்,மாடன்,பைரவன் போன்ற ஆண் தெய்வங்களுடன் வேட்டைக்கு செல்கிறாள்....
பில்லி,சூனியம், ஏவல் போன்றவற்றை கருவறுக்க உருவானவள் தான் வனப்பேச்சியம்மன்.....
பல கோவில்களில் வனப்பேச்சியம்மனுக்கு காவலாக சுடலைமாடனும் கருப்பனும் தான் இருக்கிறார்கள்
சிறப்பு:
பிள்ளை வரம் கொடுப்பதில் முதன்மையானவள்...
எனவே தான் குழந்தை இல்லாத தம்பதியினர் இவளை வணங்கி குழந்தை பிறந்தவுடன் இவளுக்கு நேர்த்திக்கடனாக மரத்தொட்டில் கட்டி சீலைப்பிள்ளை மற்றும் குழந்தை பொம்மை வாங்கி வைக்கின்றனர்
குழந்தைகள் பேச்சாற்றல் மிகுந்து விளங்க இவளுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர்
குடும்பத்தில் ஒற்றுமை நிலைத்து மகிழ்ச்சியான வாழ்க்கை அமையவும் பேச்சியம்மனை வழிபடுகின்றனர்
*🔯பலியிடுதல்:*
கிடா,பெண் பன்றி,முட்டைக்கோழி,சேவல் போன்ற உயிர் பலியினை பேச்சியம்மனுக்கு கொடுக்கின்றனர்
⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️
Comments
Post a Comment