நவராத்திரி
*🔯நவராத்திரி 2020 எப்போது? பூஜை முறைகளும், சரியான நேரங்களை தெரிந்துகொள்ளுங்கள்,*
*🔯அன்னையின் சக்தி ரூபத்தை அனுஷ்டிக்கும் விதமாக, வழிபடும் விதமாக கடைப்பிடிக்கும் விரதங்களில் நவராத்திரி விரதம் மிக முக்கியமானது.*
அன்னையின் அதிதேவதையாக விளங்கும் சக்தியைப் போற்றும் விதமாக நவராத்திரி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.
அன்னையின் சக்தி ரூபத்தை அனுஷ்டிக்கும் விதமாக, வழிபடும் விதமாக கடைப்பிடிக்கும் விரதங்களில் நவராத்திரி விரதம் மிக முக்கியமானது.
அன்னையின் அதிதேவதையாக விளங்கும் சக்தியைப் போற்றும் விதமாக நவராத்திரி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது
இந்தியாவில் பல பண்டிகைகள் கொண்டாடப்படுவது வழக்கம். ஒவ்வொன்றின் பின் பல புராண நிகழ்வுகள் நடந்திருப்பதை, புராண கதைகள் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
அந்த வகையில் நவராத்திரி என்ற 9 நாட்கள் நடக்கக் கூடிய பெரிய பண்டிகையை நாடுமுழுவதும் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
உலகம் முழுவதும் கோவிட் -19 தாக்கத்தின் காரணமாக முடங்கி இருந்த நிலையில் தற்போது, பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றது.
*🔯நவராத்திரி எப்போது?*
மகாளய அமாவாசைக்கும், மகா சஷ்டிக்கும் இடையே வரக்கூடியது தான் நவராத்திரி எனும் கொழு கொண்டாட்டம்.
நவராத்திரி ஏன் கொண்டாடப்பட வேண்டும்?:
அறிவியல், ஆன்மிக பின்னனி
பொதுவாக நவராத்திரி கொண்டாட்டம் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை தினமான மகாளய அமாவாசைக்கு மறுநாளிலிருந்து ஒன்பது நாட்கள் கொண்டாடுவது வழக்கம்.
ஆனால் இந்த முறை 2020 புரட்டாசி மாதத்தில் 1ம் தேதியும், புரட்டாசி 30ம் தேதியும் அமாவாசை வந்துள்ளது. அதனால் முதல் அமாவாசையை தவிர்த்து, 30ம் தேதியில் வரக்கூடிய அமாவாசைக்கு மறுநாளிலிருந்து அதாவது ஐப்பசி 1 (அக்டோபர் 17) தேதியிலிருந்து இந்த பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
இந்தாண்டு அக்டோபர் 17ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.
அக்டோபர் 26ம் தேதி தசரா என பல்வேறு பகுதிகளில் கோலாகலாமாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் இந்த தினத்தை விஜயதசமி என கடைப்பிடிக்கப்படுகிறது.
நவராத்திரியின் ஒன்பது நாட்களில் அம்பாளுக்கு ஒன்பது வித அன்னையின் அவதார ரூபங்கள் அலங்கரிக்கப்படுவது வழக்கம்.
அந்த அன்னையின் உருவங்கள் என்ன என்பதை இங்கு பார்ப்போம்.
நவராத்திரி விழாவில் ஒவ்வொரு தினத்தில் செய்ய வேண்டிய பூஜை மற்றும் பிரசாதங்களின் விபரம்
*🔯துர்க்கையின் ஒன்பது உருவங்கள்*
⚜️முதல் நாளில் அன்னை மகேஸ்வரி ரூபம்
⚜️இரண்டாம் நாளன்று கெளமாரி ரூபம்
⚜️மூன்றாம் நாள் வராகி அம்மன் ரூபம்
⚜️நான்காம் நாள் மகாலட்சுமி தோற்றம்
⚜️ஐந்தாம் நாளில் வைஷ்ணவி ரூபம்
⚜️ஆறாம் நாள் இந்திராணியாக காட்சி தருவாள்
⚜️ஏழாம் நாளில் சரஸ்வதியாக அருள்வாள்
⚜️எட்டாம் நாளில் நரசிம்ஹி ரூபம்
⚜️ஒன்பதாம் நாள் சாமுண்டியாக தோற்றம்
*🔯கொலு எப்போது தொடங்க வேண்டும்?*
புரட்டாசி இரண்டாவது அமாவாசை முடிந்த பின்னர் மறுநாள் ஐப்பசி 1 (அக்டோபர் 16) நவராத்திரி கொலு கொண்டாட்டம் தொடங்குகிறது.
*🔯நவராத்திரி ஆரம்பம் காலை 7.31 - 9.00 மணிக்குள் கொலு வைக்க மிக நல்ல நேரம்.*
அக்., 25 (ஞாயிறு) சரஸ்வதி, ஆயுத பூஜை (நல்லநேரம் காலை 7.31 - 9.00 மணி)
அக்., 26 (திங்கட் கிழமை) விஜயதசமி (கொலு எடுக்க காலை 6.00 - 7.30 மணி)துர்க்கையின் 9 வடிவங்கள்:
நவதுர்க்கை வடிவமும், சிறப்பம்சமும்
மேற்கு வங்கத்தில் கலைக்கட்டும் நவராத்திரி
மேற்கு வங்கத்தில், துர்கா பூஜை என்பது ஒரு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
அதனால் நவராத்திரி திருவிழா போன்று கோலாகலமாக கொண்டாடுகின்றனர்.
இங்கு கடைசி 5 நாட்கள் (அக்டோபர் 22 முதல் 26 வரை) மிக உற்சாகமாக கொண்டாடுகின்றனர்.
இந்த காலகட்டத்தில், அதிகாரத்தின் உருவகமாக விளங்கும் அன்னை துர்காவின் வெற்றியை வங்காளிகள் கொண்டாடுகிறார்கள்.
*9நாள்களும் போட வேண்டிய கோலங்கள்:*
*• முதல் நாள் – அரிசி மாவு பொட்டு.*
*• இரண்டாம் நாள் – கோதுமை மாவு கட்டம்.*
*• மூன்றாம் நாள் –முத்து மலர்.*
*• நான்காம் நாள் – அட்சதை படிக்கட்டு.*
*• ஐந்தாம் நாள் – கடலை பறவையினம்.*
*• ஆறாம் நாள் – பருப்பு தேவி நாமம்.*
*• ஏழாம் நாள் – திட்டாணி (வெள்ளை மலர் களால் ஆன கோலம்).*
*• எட்டாம் நாள் – காசு பத்மம் (தாமரைக் கோலம்).*
*• ஒன்பதாம் நாள் – கற்பூரம் ஆயுதம் (வாசனைப் பொடிகளை கலந்து கோலமிட்டால் சிறப்பு).*
*ஒன்பது நாள்களும் பாட வேண்டிய ராகங்கள்:*
*• முதல்நாள் – தோடி.*
*• இரண்டாம் நாள் – கல்யாணி.*
*• மூன்றாம் நாள் – காம்போதி, கௌளை.*
*• நான்காம் நாள் – பைரவி.*
*• ஐந்தாம் நாள் – பந்துவராளி.*
*• ஆறாம் நாள் – நீலாம்பரி.*
*• ஏழாம் நாள் – பிலஹரி.*
*• எட்டாம் நாள் – புன்னாகவராளி.*
*• ஒன்பதாம் நாள் – வஸந்தா.*
*ஒன்பது நாள்களும் அணிவிக்க வேண்டிய மாலைகள்:*
*• முதல் நாள் – மல்லிகை.*
*• இரண்டாம் நாள் – முல்லை.*
*• மூன்றாம் நாள் – செண்பகம், மரு.*
*• நான்காம் நாள் – ஜாதிமல்லி.*
*• ஐந்தாம் நாள் – பாரிஜாதம் அல்லது வாசனை மலர்கள்.*
*• ஆறாம் நாள் – செம்பருத்தி.*
*• ஏழாம் நாள் – தாழம்பூ, பாரிஜாதம், விபூதிப்பச்சிலை.*
*• எட்டாம் நாள் – சம்பங்கி, மருதாணிப்பூ.*
*• ஒன்பதாம் நாள் – தாமரை, மரிக்கொழுந்து.*
*ஒன்பது நாள்களும் விருந்தினருக்குக் கொடுக்க வேண்டிய பழங்கள்:*
*• முதல் நாள் – வாழைப்பழம்.*
*• இரண்டாம் நாள் – மாம்பழம்.*
*• மூன்றாம் நாள் – பலாப்பழம்.*
*• நான்காம் நாள் – கொய்யாப்பழம்.*
*• ஐந்தாம் நாள் – மாதுளை.*
*• ஆறாம் நாள் – ஆரஞ்சு.*
*• ஏழாம் நாள் – பேரிச்சம்பழம்.*
*• எட்டாம் நாள் – திராட்சை.*
*• ஒன்பதாம் நாள் – நாவல் பழம்.*
*ஒன்பது நாள்களும் செய்ய வேண்டிய பிரசாதங்கள்:*
*• முதல் நாள் – சுண்டல், வெண்பொங்கல்.*
*• இரண்டாம் நாள் – புளியோதரை.*
*• மூன்றாம் நாள் – சர்க்கரைப் பொங்கல்.*
*• நான்காம் நாள் – கதம்பம் (காய்கறிகள் கலந்த கதம்ப சாதம்).*
*• ஐந்தாம் நாள் – ததியோதனம் தயிர்சாதம், பொங்கல்.*
*• ஆறாம் நாள் – தேங்காய் சாதம்.*
*• ஏழாம் நாள் – எலுமிச்சை சாதம்.*
*• எட்டாம் நாள் – பாயஸன்னம் ( பால் சாதம்).*
*• ஒன்பதாம் நாள் – அக்கார அடிசில் (பச்சரிசி,பால், சர்க்கரை கலந்த பால் பாயசம்), சர்க்கரை பொங்கல்.*
*நவராத்திரி விழா நல்வாழ்த்துகள் !*
*தேவி சரணம் ! ஸ்ரீ மாத்ரே நமஹ !*
Comments
Post a Comment