Posts

Showing posts from June, 2021

தினந்தோறும் சாமி கும்பிடுறீங்களா.. இந்த 10 விஷயத்தை மறக்காம மனசுல வெச்சுக்கோங்க

... கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபடுகிறோம். வீட்டிலும் பூஜைகள் செய்து வழிபடுகிறோம். ஆனால் இவை எல்லாவற்றையும் முறையாகத் தான் செய்கிறோமா? சில விதிமுறைகள் இருக்கின்றன. உங்களுக்கு தெரியாத சில ஆன்மிக குறிப்புகளை டாப் தமிழ் நியூஸ் வாசகர்களுக்காக சொல்கிறோ  1. காயத்ரி மந்திரத்தை பயணத்தின்போது, சொல்லக் கூடாது. சுத்தமான இடத்தில் தான் காயத்ரி மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். 2. கற்பூரம் ஏற்றி கடவுளுக்கு காட்டும் பொழுது, இறைவனின் காலிற்கு நான்கு தடவை சுற்றிக் காண்பிக்க வேண்டும். தொப்புளுக்கு இரண்டு தடவை சுற்றிக் காண்பிக்கவேண்டும். முகத்துக்கு ஒரு தடவையும், முழு உருவத்துக்கும் மூன்று தடவையும் காண்பித்து வழிபட வேண்டும். 3. நமது வீட்டு வாசலில் கோலம் போடாமலும், வீட்டில் விளக்கேற்றாமலும் அருகில் இருக்கும் ஆலயங்களுக்குச் செல்லக் கூடாது. அப்படிச் செல்வதால் பலன்கள் கிடையாது. 4. விளக்கு எரிந்துக் கொண்டிருக்கும் பொழுது, அதில் இருக்கும் எண்ணெய் அல்லது நெய்யை கையால் தொடுவதும் அதன் பிறகு அதைத் தலையில் தடவிக் கொள்வதும் கூடாது. 5. சிவன் அர்ச்சனைக்கு உகந்தது வில்வ இலை. விஷ்ணுவிற்கு உகந்தது துளசி. விநாயகர் வழிபாட்டிற

ஏன் சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது?....

சனிக்கிழமைக்கும் பெருமாளுக்கும் என்ன தொடர்பு?... இதற்கான விடை பிரம்ம வைவர்த்த புராணத்தில் உள்ளது. சூரியனுக்கு சஞ்ஜனா, சாயா என இரண்டு மனைவிகள். சூரியனுக்கும் சஞ்ஜனாவுக்கும் பிறந்தவர்கள் யமதர்ம ராஜாவும், யமுனா நதியும். சாயாவுக்குப் பிறந்தவர் சனீஸ்வரன். கண்ணபிரான் யமுனையில் உள்ள காளியனை அடக்கி யமுனா நதியைத் தூய்மையாக்கிய பின் அனைத்து தேவர்களும் யமுனையைப் போற்றத் தொடங்கினார்கள். கங்கையை விடப் புனிதமான நதியென அதைக் கொண்டாடினார்கள். அதைக் கண்ட சனீஸ்வரன் யமுனையிடம் வந்து, "சகோதரியே! உன்னை மங்களமானவள் என எல்லோரும் கொண்டாடுகிறார்கள். ஆனால் என்னை முடவன் என்றும் அமங்களமானவன் என்றும் கூறுகிறார்களே. உன்னைப் போல நானும் மங்களகரமானவனாக ஆக வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டார். அங்கே வந்த நாரதர், "சனீஸ்வரா! யமுனை கண்ணனின் திருவுள்ளத்தை மகிழ்வித்தாள். அதனால் மங்களகரமானவளாக இருக்கிறாள். நீயும் கண்ணனின் திருவுள்ளத்தை உகப்பித்தால் மங்களமாகி விடுவாய்!" என்று கூறினார். "அவனை உகப்பிக்க நான் என்ன செய்ய வேண்டும்?" என்று சனீஸ்வரன் கேட்டார். அதற்கு நாரதர், "ஹோலிக